ETV Bharat / bharat

அடுத்த பிரதமர் யார்? ராகுலா.. மோடியா? மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன? - Lok sabha Election Exit poll - LOK SABHA ELECTION EXIT POLL

Lok sabha Election Exit poll Results 2024: 18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Exitpoll 2024
கருத்துகணிப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 6:45 PM IST

டெல்லி: 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இன்று (ஜூன்.1) வரை 7 கட்டங்களாக நடைபெற்றன.கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முதலாவது கட்ட தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்தமாக 66.14 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஏப்ரல் 26ஆம் தேதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு நடைபெற்ற 2ஆம் கட்ட மக்களவை தேர்தலில் 66.71 சதவீத வாக்குகள் பதிவாகின. மே 7ஆம் தேதி 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 3வது கட்ட தேர்தலில் 5.68 சதவீத வாக்குகள் பதிவாகின.

மே 13ஆம் தேதி 4வது கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக 69.16 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மே 20ஆம் தேதி 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 49 தொகுதிகளுக்கு நடைபெற்ற 5வது கட்ட மக்களவை தேர்தலில் 62.2 சதவீத வாக்குகள் பதிவாகின.

மே 25ஆம் தேதி 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற 6வது கட்ட மக்களவை தேர்தலில் 63.36 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில். பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு இன்று (ஜூன்.1) 7வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. மக்களவை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை மேற்கொண்ட பிரபல செய்தி நிறுவனங்கள் அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி, நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 315 முதல் 371 இடங்களையும், இந்தியா கூட்டணி 60 முதல் 125 இடங்களையும் பிற கட்சிகள் 47 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் நிறுவனத்தின் கணிப்பு படி பாஜக தனியாக 315 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் 371 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி 60 இடங்களிலும், இந்தியா கூட்டணி ஒட்டுமொத்தமாக 125 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்தியா நியூஸ் - டி டைனமிக்ஸ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகள் முடிவுகளின் படி பாஜக கூட்டணி 371 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 125 இடங்களிலும் பிறக் கட்சிகள் 47 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் டி5 தெலுங்கு செய்தி நிறுவனம் நடத்திய தேர்தல் முடிவு கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணி 359 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 154 இடங்களிலும், பிறக் கட்சிகள் 30 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் ஜன் கி பாத் செய்தி நிறுவனம் மேற்கொண்ட கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 362 முதல் 392 வரை மக்களவை தொகுதிகளை கைப்பறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காங்கிரஸ் கூட்டணி 141 முதல் 161 இடங்களையும், பிறக் கட்சிகள் 10 முதல் 20 இடங்களையும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. நியூஸ் நேஷன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிபுகளின் படி பாஜக 342 முதல் 378 இடங்களிலும், காங்கிரஸ் 153 முதல் 169 இடங்களிலும், பிறக் கட்சிகள் 21 முதல் 23 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் Republic Bharat - Matrize செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளின் படி பாஜக 353 முதல் 368 இடங்களிலும், காங்கிரஸ் 118 முதல் 133 இடங்களிலும், பிற கட்சிகள் 43 முதல் 48 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் NDTV Poll of Polls வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளின் படி பாஜக 365 இடங்களிலும், காங்கிரஸ் 142 இடங்களிலும், பிற கட்சிகள் 36 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: தமிழகத்தில் முந்துவது யார்? - கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? - Tamil Nadu Exit Poll Results 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.