கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் மருத்துவரின் இறப்புக்கு நீதி கேட்டு ஜுனியர் மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால், மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பத்தை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள ஜுனியர் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றனர். இதனால், மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்படுவதற்கு முன்பு தொடர்ந்து 36 மணி நேரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். தனது உடல்நிலையை கருத்தில்கொள்ளாமல் ஓய்வின்றி 36 மணி நேரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கடமை ஆற்றி வந்த மருத்துவர், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு இதுவரை 11 நாட்கள் ஆகிய நிலையில், அவருக்கான நீதி எங்கே என கேள்வி எழுப்பியும், பணியிடத்தில் சிறந்த பாதுகாப்புக்காக சட்டம் இயற்றுமாறும் ஜுனியர் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், கொல்கத்தாவில் சீனியர் மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 26 கிலோ நகையுடன் மாயமான வங்கி மேலாளர் கைது.. கோழிக்கோடு டூ தெலங்கானா வரை சுற்றியது எப்படி?