ETV Bharat / bharat

கேரள முதலமைச்சர் சென்ற கார் விபத்து.. அடுத்தடுத்து மோதிய பாதுகாப்பு வாகனங்கள்!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரம் வாமனபுரம் வழியாக சென்று கொண்டிருந்த வாகனம் திடீர் விபத்துக்குள்ளான நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படாவில்லை.

விபத்து நடைபெற்ற இடம்
விபத்து நடைபெற்ற இடம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2024, 10:07 PM IST

திருவனந்தபுரம்: கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தை நோக்கி காரில் இன்று சென்று கொண்டிருந்தார். அப்போது வாமனபுரம் பாதை வழியாக சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காரில் சென்ற முதலமைச்சர்: பொதுவாக முதலமைச்சர் வாகனத்திற்கு முன்னும், பின்னும் பாதுகாப்பு வாகனம் பின் தொடர்வது வழக்கம். இந்நிலையில் முதலமைச்சர் வாகனத்துடன் சாலையில் வரிசையாக சென்றுக்கொண்டிருந்த வாகனங்களில் முதலாவதாக சென்று கொண்டிருந்த வாகனத்திற்கு முன் பெண் ஒருவர் இருச்சக்கர வாகனத்தில் திடீரென சாலையின் இடையில் வந்துள்ளதாக தெரிகிறது.

திடீர் ப்ரேக்கால் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்: அதனால் அவர் மீது மோதிவிடாமல் செல்லவும், விபத்து நடப்பதை தவிர்க்கும் பொருட்டும் வரிசையில் முதலாவதாக சென்ற கொண்டிருந்த முதலமைச்சர் இருந்த வாகனத்தின் ஓட்டுநர் திடீரென வாகனத்தின் ப்ரேக்கை பிடித்து வாகனத்தை நிறுத்த முயற்சித்துள்ளார். அதனால் அடுத்தடுத்து வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துகுள்ளானதாக தெரிகிறது.

இதையும் படிங்க: குஜராத்தில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவு!

இதில் முதலமைச்சரின் வாகனத்திற்கு பின் வந்த காவல்துறையினர் வாகனம் முன்னதாக சென்று கொண்டிருந்த முதலமைச்சரின் வாகனம் மீது மோதியதியுள்ளது. இதனால் முதலமைச்சரின் வாகனத்தில் சிறிய சேதமடைந்துள்ளது. மேலும் கமாண்டோ வாகனம், போலீஸ் எஸ்கார்ட் வாகனம், ஆம்புலன்ஸ் அடுத்தடுத்து மோதியுள்ளது.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை: அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் முதலமைச்சர் பினராயி விஜயன் பயணித்த வாகனம் பெரிய அளவில் சேதம் ஏற்படாததால் அதே வாகனத்தில் அவர் மீண்டும் பயணத்தை தொடர்ந்தார். ஆனால் மற்ற எஸ்கார்ட் வாகனங்கள் சிறிது சேதமடைந்ததால் 5 எஸ்கார்ட் வாகனங்களையும் சம்பவ இடத்தில் நிறுத்தி விட்டு மாற்று வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களுடன் எஸ்கார்ட் மற்றும் காவல்துறையினர் முதலமைச்சரை பாதுகாப்பு கருதி மீண்டும் பின் தொடர்ந்து சென்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.