ETV Bharat / bharat

திருப்பதி லட்டுவால் உஷாரான கேதார்நாத்: பிரசாதம் தயாரிக்க வழிமுறைகள் வெளியீடு - TIRUPATI LADDU

திருப்பதி லட்டுவுக்கான நெய்யில் கலப்படம் இருப்பதாக புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோயில் நிர்வாகம் பிரசாதம் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்கள்
கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 6:51 PM IST

டேராடூன்: உத்தரகாண்டில் உள்ள 4 புனித வழிபாட்டுத்தலங்களை "பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டி" (BKTC) கோயில்களை நிர்வகித்து வருகிறது. இந்த கமிட்டி சார்பில் பிரசாதம் தயாரிப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) வெளியிடப்பட்டுள்ளன. இனி ஆண்டுதோறும் உணவுப் பாதுகாப்பு சோதனை இந்த பிரசாதங்கள் மீது நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமிட்டி தலைவர் அஜேந்திரா அஜய் வெளியிட்டுள்ள தகவலின்படி பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தும், அரிசி, எண்ணெய் குங்குமப்பூ உள்ளிட்டவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பிரசாதம் தயாரிக்கும் சமையல் கூடம் என்ன அளவில் இருக்க வேண்டும், குடிநீரின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும் என புதிய வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சமையல் செய்பவர்கள் தங்களை சுத்தம் செய்து கொள்வதற்காக தண்ணீர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும். சுத்தமான டவல் வழங்கப்படவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • பிரசாதத்திற்கான மூலப்பொருட்கள் வாங்கும் போது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்றும். இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் போது முறையாக பரிசோதிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் மூலப்பொருட்களில் கற்கள், முடி, கண்ணாடி, பூச்சிகள் இல்லை என்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • பிரசாதத்திற்காக வாங்கப்படும் எண்ணெய், வாசனைப் பொருட்கள், நெய், குங்குமப்பூ போன்றவற்றை பேக்கிங் செய்யப்பட்ட நிலையிலேயே வாங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • பிரசாதத்திற்கான மூலப்பொருட்களை வாங்கிய பின்னர் காலாவதியாகும் தேதி, உற்பத்தியாளரின் முகவரி, அக்மார்க் தரக்குறியீடு, உரிம எண் போன்றவற்றை பரிசோதிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டள்ளது.
  • வேறு வழியின்றி மறுபடியும் பயன்படுத்த நேர்ந்தால் 3 முறைக்கு மேல் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • பிரசாதம் தயாரிக்கும் ஊழியர்கள் கைகழுவுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன. பிரசாதம் தயாரிக்கும் முன்னரும், கழிவறை பயன்படுத்திய பின்னரும், பிரசாத பாத்திரங்களை கழுவிய பின்னரும் கைகளை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • பிரசாதம் தயாரிக்கும் பணியில் இருக்கும் ஊழியர்கள் ஆரோக்கியமாகவும், நோய்வாய்ப் படாதவர்களாகவும் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
  • உலர் பழங்கள் மரம் அல்லது பிளாஸ்டிக் கொள்கலன்களில் சேமிக்கபட்டிருக்க வேண்டும்.
  • இருப்பு வைக்கப்பட்டுள்ளதில் இருப்பதிலேயே பழைய பிரசாதத்தை முதலில் காலி செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உத்தரகாண்டில் உள்ள கோயில்களில் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்கின்றன. திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாத பிரச்சனையைத் தொடர்ந்து இந்த கோயில்களிலும் பிரசாதங்களின் ஆய்வுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.