ETV Bharat / bharat

உக்ரைன் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; மீட்க கோரி உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை! - ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்தியர்கள்

Russia Ukraine War: ரஷ்யா, உக்ரைன் போரில் ரஷ்ய ஆயுதப்படையில் சிக்கியுள்ள காஷ்மீர் நபரை மீட்ட இந்திய வெளியுறவு அமைச்சகம் உதவி செய்ய வேண்டும் என அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரஷ்யா, உக்ரைன் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுத் தர வேண்டும்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 5:02 PM IST

Updated : Feb 26, 2024, 6:32 PM IST

ஸ்ரீநகர்: காஷ்மீர் புல்வாமா மாவட்டம் போஷ்வான் கிராமத்தைச் சேர்ந்த ஆசாத் யூசுப் குமாருக்கு (31) திருமணமாகி 4 மாத ஆண் குழந்தை உள்ளது. ஆசாத் சில ஆண்டுகள் துபாயில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் தனது சொந்த கிராமத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார்.

ரஷ்யா உக்ரைன் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுத் தர வேண்டும்

ஆசாத் மும்பையைச் சேர்ந்த யூடியூபர் ஃபைசல் கான் நடத்தி வரும் ‘baba vlogs’ மூலம் தனக்கு துபாயில் வேலை கிடைத்துள்ளதாக தனது குடும்பத்தாரிடம் கூறி துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளார். துபாய் சென்ற பிறகு தான் ரஷ்யா, உக்ரைன் போரில் ரஷ்யா ஆயுதப்படை வீரராக அழைத்து செல்லவுள்ளனர் என தெரியவந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. பின்னர் ரஷ்ய எல்லைக்கு உக்ரைன் நாட்டுடன் போர் புரிய ஆசாத்துடன் சேர்த்து 12 இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

இதேபோல், ஆசாத்துடன் சேர்த்து குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு இந்திய இளைஞர் சாகூர் அகமது உள்ளிட்ட பலரை baba vlogs யூடியூப் சேனல் நடத்தி வரும் ஃபைசல் கான் ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து புல்வாமா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து ஆசாத்தின் குடும்பத்தினர் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் ஆசாத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து, ஈடிவி பாரத் இணையதளத்திற்கு பேட்டி அளித்த ஆசாத்தின் தாயார் ராஜா, "எனக்கு ரஷ்யா நாட்டை பற்றி தெரியாது, அது எங்குள்ளது என்று கூட தெரியாது. எங்களுக்கு ஊடகத்தின் மூலம் தான் தனது மகன் அங்கு சிக்கியுள்ளது தெரியவந்தது. எனது மகனை காப்பாற்றி இந்தியாவை அழைத்து வர வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து பேசிய ஆசாத்தின் சகோதரர் சஜத் அகமது குமார், “ கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆசாத் வீட்டை விட்டு சென்றார். பின்னர் டிசம்பர் 14ஆம் தேதி தான் துபாயில் இருப்பதாக கூறினார். அவர் ரஷ்யாவில் வேலைக்கு செல்லவிருப்பதாக எங்களிடம் கூறவில்லை. அப்படி தெரிந்திருந்தால் போர் நடக்கும் ரஷ்யா நாட்டிற்கு செல்ல வேண்டாம் என மறுத்திருப்போம். சில நாட்களுக்கு முன் ஆசாத் எங்களை தொடர்பு கொண்டு உக்ரைன் ராணுவத்தால் காலில் சுடப்பட்டு காயம் அடைந்ததாக கூறினார். ஆசாத் உள்ளிட்ட பல இந்தியர்கள் ரஷ்யாவில் சிக்கித் தவித்து வருகின்றனர்” என கூறியுள்ளார்.

இதுகுறித்து, விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி கூறுகையில், “குஜராத், கர்நாடகா என பல பகுதிகளில் இருந்து ரஷ்யா ராணுவத்திற்கு உதவுவதற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் ரஷ்ய அரசு அதிகாரிகள் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து போரில் பங்கேற்க கட்டாயப்படுத்தியுள்ளனர்” என கூறினார்.

இது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ரந்திர் ஜெய்ஷ்வால் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய தூதரகம் ரஷ்யா அதிகாரிகளிடம் இந்த பிரச்சனை குறித்து பேசி வருகிறோம். அனைத்து இந்தியர்களும் ரஷ்யாவில் இவ்வாறு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என கூறினார்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத பனி: பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டு பயணி பலி!

Last Updated : Feb 26, 2024, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.