பெங்களூரு : கர்நடாக அரசுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இமெயிலில் பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடக்க உள்ளதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டு உள்ளது. முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், உள்துறை அமைச்சர் மற்றும் பெங்களூரு நகர் காவல் ஆணையர் ஆகியோரின் பெயரிட்டு மிரட்டல் இமெயில் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கிடைத்த புகாரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் கர்நாடாகவில் பிரபல தனியார் உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதலில் நடத்தப்பட்டதில் ஏறத்தாழ 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்டதாக கருதப்படும் ஒருவரின் புகைப்படம் உள்ளிட்ட அடையாளங்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். இதனிடையே மீண்டும் ஒரு சம்பவமாக கர்நாடக அரசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : பணமோசடி வழக்கு: கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் விடுவிப்பு - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!