ETV Bharat / bharat

ஆபாச வீடியோ விவகாரம்: எச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்! - Karnataka Prajwal Revanna case - KARNATAKA PRAJWAL REVANNA CASE

ஆபாச வீடியோ விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவை 24 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு ஆஜராக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 2:58 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹசன் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பிரஜ்வெல் ரேவண்ணா தொடர்புடையதாக கூறப்படும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதில் ஆயிரக்கணக்கான பெண்களை பிரஜ்வெல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது.

தன்னிடம் உதவி கேட்ட வந்த பெண்களிடம் பிரஜ்வெல் ரேவண்ணா பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி அதை வீடியோவாக பதிவு செய்ததாகவும் தற்போது அந்த வீடியோ வெளியானதாகவும் கூறப்பட்டு உள்ளது.இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி கர்நாடகா மாநில மகளிர் ஆணைய தலைவர், மாநில அரசு மற்றும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

அதேநேரம், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போட்டோ மற்றும் வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளதாக பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

இதனிடையே பிரஜ்வெல் ரேவண்ணா இந்தியாவை விட்டு வெளியேறியதாக தகவல் பரவியது. இந்நிலையில், ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக 24 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறும் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும் ஹோலேநரசிபூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எச்.டி.ரேவண்ணாவுக்கு சிறப்பு புலனாய்வு குழு நோட்டீஸ் வழங்கி உள்ளது.

இதனிடையே ஆபாச வீடியோ விவகாரத்தில் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி 3 நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறும், இந்தியாவை விட்டு வெளியேறி தலைமறைவான பிரஜ்வல் ரேவண்ணாவை விரைவாக கைது செய்யுமாறும் கர்நாடக டிஜிபி அலோக் மோகனிடம், மாநில மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தெரிவித்து உள்ளார்.

இருப்பினும், சிறப்பு புலனாய்வு குழுவின் நோட்டீஸ் கிடைத்ததும் அவர்களது விசாரணைக்கு பிரஜ்வல் ரேவண்ணா நேரில் ஆஜராவார் என குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணாவை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் எச்.டி குமாரசாமி நடவடிக்கை எடுத்தார்.

பிரஜ்வல் ரேவண்னாவை கட்சியில் நீக்கக் கோரி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்குள்ளேயே குரல் எழுந்த நிலையில், முன்னாள் பிரதமர் மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவுகவுடா தலைமையில் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகிகள் கூட்டம் அவசரமாக நடைபெற்றது.

இதில் முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண் நிலையில், ஆபாச வீடியோ விவகாரத்தில் அரசு அமைத்து உள்ள சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் வரை பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : ஆபாச வீடியோ விவகாரம்: பிரஜ்வல் ரேவண்ணா ஜேடிஎஸ் கட்சியில் இருந்து நீக்கம் - குமாரசாமி திட்டவட்டம்! - Prajwal Revanna Suspended In JDS

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.