பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த ஆட்சியில் அரசு தரப்பில் மேற்கொள்ளப்படும் பொதுப் பணிகளுக்கு அப்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு 40 சதவீதம் கமிஷன் பெற்றுக் கொள்வதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஊழல் விகித அட்டை என்ற பெயரில் காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்டது.
முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி குறித்து உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்புவதாக பாஜக எம்எல்சி மற்றும் பொதுச் செயலாளர் கேஷவ் பிரசாத் என்பவர், சித்தராமையா, சிவகுமார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று (ஜூன்.1) மீண்டும் வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: இறுதி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு! மேற்கு வங்கத்தில் குளத்தில் வீசப்பட்ட இவிம் இயந்திரங்கள்! - Lok Sabha Election 2024