ETV Bharat / bharat

'செர்பியாவில் உயிரிழந்தவரின் உடலை தாயகம் மீட்டுவர கோரிக்கை' - மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு எம்பி வீராசாமி கடிதம்! - Kalanidhi Veerasamy letter - KALANIDHI VEERASAMY LETTER

Kalanidhi Veerasamy MP: செர்பியா நாட்டில் உயிரிழந்த ராஜமகேஷ் என்பவரின் உடலை, தமிழ்நாடு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, எம்பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.

KALANIDHI VEERASAMY MP
கலாநிதி வீராசாமி எம்பி (Kalanidhi Veerasamy MP (Credits to Etv Bharat Tamil Nadu)))
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 2:00 PM IST

சென்னை: செர்பியா நாட்டில் இருந்து ராஜமகேஷ் என்பவரின் உடலை தமிழகத்திற்குக் கொண்டுவரக் கோரி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது, "செங்கல்பட்டு, மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த ராஜமகேஷ் என்பவர் செர்பியா நாட்டில் உள்ள பெல்இரேட் நகரத்தில் ஏட்ப்ரோ டூ என்னும் தொழிற்சாலையில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 27.04.24 அன்று அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். பொருளாதார வசதி குறைந்த இவரது குடும்பத்தினர், அவரது உடலை மீட்டுத் தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு அரசின் உதவியை மட்டுமே நம்பியுள்ளனர்.

எனவே, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இவரது உடலை உடனடியாக மீட்டு நமது நாட்டுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து தரும்படியும், மேலும் செர்பியா நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தக்க ஆணைகள் வெளியிட வேண்டும். மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்துள்ள அந்த குடும்பத்தினரின் கோரிக்கையை, நிறைவேற்றித் தர உடனடியாக ஆவண செய்ய வேண்டும்" என்று கலாநிதி வீராசாமி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "எனது சாவுக்கு காரணமானவர்களை.." நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதியதாக மற்றொரு கடிதத்தில் பகீர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.