ETV Bharat / bharat

அமெரிக்க துணை அதிபராக தேர்நெடுக்கப்பட்டுள்ள ஜே.டி வான்ஸூக்கு வாழ்த்து கூறிய ஆந்திர முதலமைச்சர்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டோனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜே.டி வான்ஸூக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

ஜே.டி.வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸுடன்
ஜே.டி.வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸுடன் (Credits- AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2024, 1:09 PM IST

அமராவதி: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டோனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜே.டி வான்ஸூக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலானது நவ.5ஆம் தேதி நடைபெற்ற நிலையில் நேற்றைய தினம் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் போட்டியிட்டனர். அதில் ட்ரம்ப் 277 எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 224 எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளையும் பெற்றுள்ளதன் அடிப்படையில் ட்ரம்ப் மீண்டும் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக பதவியேற்கவுள்ளார்.

மேலும் அமெரிக்க துணை அதிபராக ஜே.டி வான்ஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி உஷா சிலுக்குரி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆந்திராவில் உள்ள பீமாவரம், கோதாவரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்நிலையில் ஜே.டி வான்ஸ் துணை அதிபராக பதிவியேற்க உள்ளதற்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.டி.வான்ஸுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவரது வெற்றி ஒரு வரலாற்று தருணத்தைக் உருவாக்கியுள்ளது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட உஷா வான்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது குடிமகனின், ஜே.டி வான்ஸின் மனைவியாக இரண்டாவது குடிமகளாகி உள்ளார். உலக அரசியல் களத்தில் உயர் பதவி வகிக்கும் தெலுங்கு பாரம்பரியத்தை கொண்ட முதல் பெண்மணி இவர் ஆவார்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பிணையில்லாக் கல்விக் கடன் - பிரதமரின் ‘வித்யாலக்ஷ்மி’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டொனால்ட் டிரம்பை வாழ்த்தி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “டிரம்பின் வெற்றியால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படும். டிரம்ப் கூறியது போல் தனது நாட்டை முன்னோக்கி வழிநடத்தத் தயாராகி வருகிறார். அந்த முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகள். அவரது முதல் பதவிக்காலத்தில் இந்திய-அமெரிக்க கூட்டுறவு வலுவாக இருந்தது. எனவே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டிரம்ப் தலைமையில் இயங்கும் இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் ஒத்துழைப்புடன் வளர்ச்சி காணும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.