ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி தொகுதி பங்கீடு நிறைவு! - Jammu and kashmir assembly election

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 11:01 PM IST

Jammu and Kashmir Assembly Election: ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் தொகுதி பகிர்வு ஒப்பந்ததை ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா வெளியிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா
ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா (Credits- ANI Official Website)

(ஸ்ரீநகர்) ஜம்மு மற்றும் காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டில் கடைசியாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந் சட்டமன்றத்தின் பதவிக் காலம் 2020ஆம் ஆண்டு முடியவிருந்த நிலையில், ஜம்மு&காஷ்மீர் மற்றும் லடக் யூனியன் பிரதேசங்களாக 2019ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் ஜம்மு & காஷ்மீரின் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மூன்று கட்டங்களாகத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக இன்று (ஆக.26) தேர்தலில் போட்டியிடும் 44 வேட்பாளர்கள் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பின் அடுத்த சில நிமிடங்களிலேயே அதனை வாபஸ் பெற்றது. எதற்காக வாபஸ் பெறப்பட்டது எனத் தெரிவிக்கப்படாத நிலையில் திருத்தப்பட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கூட்டணியில் இருக்கும் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தொகுதிகள் பகிர்வு ஒப்பந்தத்தின்படி 51 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சியும், 32 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், பின் இரு கட்சிகளும் இணைந்து 5 இடங்களில் நட்புப் போட்டியாகவும், 1 இடத்தை சிபிஐ(எம்) மற்றும் 1 இடத்தை பாந்தர்ஸ் கட்சிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா கூறூகையில், "காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு தீர்க்கமாக சிந்திததுதான் இந்த தொகுதி பகிர்வை செய்துள்ளோம். அனால் சில தொகுதியில் இரு கட்சிக்கும் இடங்களை பகிர்ந்து கொள்ளுவதில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தால் அங்கு நட்புரீதியான போட்டி நிலவும்படி 5 தொதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளன்று தான், செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ள முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளுக்கு இந்த சீட் பகிர்வு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஜம்மு-காஷ்மீரின் ஆன்மாவை பாஜக அழிக்க முடியாது. ஜம்மு-காஷ்மீரின் ஆன்மாவை காப்பாற்றுவதே எங்கள் இந்திய கூட்டணியின் முக்கிய நோக்கம், அதனால்தான் ஜம்மு-காஷ்மீரில் முழுமையாக ஆட்சி அமைக்க காங்கிரஸும், தேசிய மாநாட்டு கட்சியும் ஒன்று சேர்ந்துள்ளோம். ஜம்மு-காஷ்மீர் மக்களின் நண்பனாக நாங்கள் இருப்போம். அதற்கு நாங்கள் ஒன்றாகப் போராடுவோம், ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியும் அமைப்போம்” என்றார்.

இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறயுள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் தரவுபடி ஜம்மு-காஷ்மீரில் 88.06 லட்சம் வாக்காளர்கள் இருப்பதும் குப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ரூ.40 செலுத்தினால் ரூ.12 கோடி ஜாக்பாட்.. போலி இணையவழி லாட்டரி.. உண்மையான கேரள லாட்டரி என்றால் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.