ETV Bharat / bharat

ஜபல்பூர் ஆயுத தொழிற்சாலையில் நேரிட்ட வெடி விபத்தில் இருவர் பலி

ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் வெடிகுண்டுகளில் வெடிமருந்தை நிரப்பும்போது எதிர்பாராதவிதமாக வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து
ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து (Image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் உள்ள கமாரியாவில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் வெடிகுண்டுகளில் வெடி மருந்துகள் நிரப்பும் போது எதிர்பாத விதமாக வெடி விபத்து நேரிட்டதில் இருவர் உயிரிழந்தனர். 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ஆயுத தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் இந்த தொழிற்சாலையின் எஃப்6 பகுதியில் 1000 பவுண்ட் வெடிகுண்டு பிரிவில் இன்று காலை விபத்து நேரிட்டுள்ளது. விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறிய தகவலின்படி வெடி விபத்தின் போது பயங்கர சத்தம் எழும்பியதாகவும், இதில் வெடிகுண்டு தயாரிக்கும் கட்டடம் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், சேதம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. விபத்து குறித்து பேட்டியளித்த ஜபல்பூர் ஆயுத தொழிற்சாலை ஊழியர் சங்க தலைவர் ஆனந்த் சர்மா, "இரண்டு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்,"என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.