ETV Bharat / bharat

புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி.. ஜூலை 31 ஆம் தேதி கூட்டத்தொடர் துவக்கம்! - Puducherry Budget

Puducherry State Budget Session: புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் வருகிற 31ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் புதுச்சேரி சட்டசபை
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் புதுச்சேரி சட்டசபை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 1:04 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம்.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான புதுச்சேரி மாநில பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து, புதுச்சேரி சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 5 மாத அரசு செலவினங்களுக்கு மட்டும் 4,634 கோடி ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, நடப்பாண்டில் அரசின் கூடுதல் நிதி செலவினங்களுக்கான ஒப்புதல், பொதுத்துறை நிறுவனங்களின் ஏடுகள் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், அலுவல்களை முடித்து சபை நடவடிக்கை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் அடிப்படையில், கடந்த மாதம் 18 ஆம் தேதி மாநில அரசின் திட்டக்குழு கூட்டம், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில், அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டுக்கு ரூ.12 ஆயிரத்து 700 கோடி பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இதற்கான கோப்புகள் மத்திய அரசின் நிதித்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், பட்ஜெட் தாக்கலுக்கான அனுமதி கிடைப்பதற்கு தாமதமானது. இதன் காரணமாக புதுச்சேரி மாநில பட்ஜெட் தாக்கல் செய்வதற்கும் காலதாமதமானது.

இத்தகைய சூழ்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, முதலமைச்சர் ரங்கசாமி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, புதுச்சேரி மாநில பட்ஜெட் கோப்புக்கு அனுமதி வழங்கும்படி கோரியதாகவும், இதனை அடுத்து மத்திய அரசும் புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதைத் தொடர்ந்து, புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில், புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் பாணியில் பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு.. நிதி ஆயோக் கூட்டத்தை அடுத்தடுத்து புறக்கணிக்கும் முதல்வர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.