ஐதராபாத்: இந்திய விமானப்படை அதிகாரிகள் அளித்த தகவலின்படி, இந்திய விமானப்படைக்கு (Indian Air Force) சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று இரண்டு விமானிகள் உட்பட 12 பேருடன் பறந்து கொண்டிருந்த நிலையில், தரையிறங்க முற்பட்ட போது எந்திரக் கோளாறு ஏற்பட்டது. ஹட்ராலிக் எந்திரம் வேலை செய்யவில்லை என்பதால் தரையிறங்குவதற்கான சக்கரம் கீழே இறங்கவில்லை. இதனால் எச்சரிக்கை அடைந்த விமானிகள் குழுவினரை எச்சரிக்கை செய்து விட்டு வானில் வட்டமிடத் தொடங்கினர்.
சுமார் 40 நிமிடங்கள் வானில் வட்டமிட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறு வெற்றிகரமாக சரி செய்யப்பட்டது. விமானியின் வழிகாட்டுதலின் பேரில் குழுவினரின் துரிதமான செயல்பாட்டால் கோளாறு சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பேகம்பேட் விமானப்படைத் தளத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
பேகம்பேட் விமானப்படைத் தளம் ஐதராபாத் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.