ஜக்தியால்( தெலுங்கானா): திருமணம் என்ற கோட்பாடு இந்தியாவின் நெகிழ்ச்சியான கலாசாரத்தில் முக்கியமான பங்கு வகிக்கக்கூடிய சடங்காகும். இந்த சடங்கின் நோக்கம் இரு மனதையும் இணைப்பதாகும். அந்த வகையில் இதுவரை சாதி, மதம், நிறம் வேறுபாடுகள் கடந்த காதல் திருமணங்களை நாம் கண்டிருப்போம் ஆனால் இங்கு காதல் காரணியாக இருக்க பெற்றோர்களின் சம்மதத்துடன் திருநங்கையை கரம் பிடித்துள்ளார் தெலங்கானாவைச் சேர்ந்த இளைஞர்.
தெலங்கானா மாநிலம் கொல்லபள்ளி மண்டலத்தில் உள்ள லக்ஷ்மிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் மல்லையா (மாப்பிள்ளை). இவர் மாதம்பள்ளியைச் சேர்ந்த கருணாஞ்சலி என்ற திருநங்கையை காதலித்து தனது குடும்பத்தினரின் முழு ஆதரவுடனும், ஆசிர்வாதத்துடனும் திருமணம் செய்துள்ளார்.
நண்பர்கள் டூ காதலர்கள்: ஸ்ரீனிவாஸ் மற்றும் கருணாஞ்சலி இரண்டு ஆண்டுகளுக்கு முன் நண்பர்களாக இருந்து வந்த நிலையில் இருவரின் மனம் ஒத்துபோக காதலிக்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து வேலைக்காக துபாய் சென்ற ஸ்ரீனிவாஸ் மீண்டும் ஊருக்கு திரும்பியபோது தனது பெற்றோர்களிடம் தான் கருணாஞ்சலி காதலித்து வருவதாகவும் திருமணம் செய்து வைக்குமாறும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: "பெண் குழந்தைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை" - ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்!
பாகுபாடுகளை தகர்த்த பெற்றோர்: ஆனால் ஆரம்பத்தில் மறுத்த பெற்றோர். மகனின் ஆசை நிறைவேற்றுவதோடு சமூகத்தில் திருநங்கைகள் மீதான பாகுபாடுகளை நீக்கும் வகையில் துணிந்து இருவரின் திருமணத்திருக்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
திருமணத்தில் முடிந்த காதல்: இதையடுத்து ஸ்ரீனிவாஸ் மற்றும் கருணாஞ்சலி காதல் ஜோடிக்கு இன்று சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது. மாப்பிள்ளை ஸ்ரீனிவாஸ் தரப்பில் பெற்றோர்களும், கருணாஞ்சலி தரப்பில் திருநங்கைகளும் புதுமண தம்பதியினரை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தனர்.
ஆட்டம், பாட்டம் என திருமண நிகழ்வை திருநங்கைகள் கோலாகலமாக்கினர். மகனின் ஆசைக்காகவும் சமூகத்தில் திருநங்கைகளுக்கு காட்டப்படும் பாகுபாடுகள் களைய துணிச்சலுடன் இருவருக்கும் திருமணம் செய்து வைத்த பெற்றோர்களை உள்ளூர்வாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்