ETV Bharat / bharat

கனமழை எதிரொலி; ஆந்திரா, தெலங்கானாவில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிப்பு! - andhra telangana rain

author img

By ANI

Published : Sep 1, 2024, 4:10 PM IST

Andhra and Telangana rain affects train services: ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா கனமழை
ஆந்திரா மற்றும் தெலங்கானா கனமழை (Credit - X Weather Monitor and ANI)

ஹைதராபாத்: தெலங்கானாவில் கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழையையொட்டி இன்று (செப்டம்பர் 1) தெலங்கானாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் உள்ளிட்ட எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.

அதேபோல், ஆந்திராவின் விஜயவாடா, குண்டூர் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் அங்கும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக, தெலங்கானா மற்றும் ஆந்திரா கனமழையால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆந்திரா - தெலங்கானாக்கிடையே ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

முன்னதாக, ஆறு ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. 12713 விஜயவாடா - செகந்திராபாத், 12714 செகந்திராபாத் - விஜயவாடா, 17201 குண்டூர் - செகந்திராபாத், 17233 செகந்திராபாத் - சிர்பூர் காகஸ்நகர், 12706 செகந்திராபாத் - குண்டூர், 12705 குண்டூர் - செகந்திராபாத் ஆகிய ஆர் ரயில் சேவைகள் ரத்தாகின. இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக ரயில்வே உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஹைதராபாத் - 27781500, வாரங்கல் - 27782751, காசிபேட் - 27782660, கம்மன் - 27782885.

இத்தகையச் சூழலில், ஆந்திர மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், இன்று மங்களகிரி தொகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, அரசு மேற்கொண்டுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மங்களகிரி நகரில் உள்ள ரத்னல் செருவு பகுதியில், அமைச்சர் நாரா லோகேஷ் சுற்றுப்பயணம் செய்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என அப்பகுதி மக்களுக்கு அமைச்சர் உறுதியளித்தார்.

இதனிடையே, ஆந்திராவின் பல்நாடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் புளிச்சிந்தலை அணை நிரம்பியது. இந்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வுக் கூட்டம் நடத்தி, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பாகிஸ்தானில் எஸ்சிஓ மாநாடு: வந்து சேர்ந்த அழைப்பு.. செல்வாரா பிரதமர் மோடி..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.