ETV Bharat / bharat

நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் இளைஞர் உயிரிழப்பு - தடுப்புப் பணிகள் தீவிரம்! - Nipah Virus in kerala - NIPAH VIRUS IN KERALA

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி இறந்த இளைஞருக்கு நிபா வைரஸ் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2024, 10:24 PM IST

மலப்புரம்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து, மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.

கேரளா மலப்புரம் மாவட்டம் அருகே உள்ள நடுவத் எனும் பகுதியில் 24 வயது இளைஞர் ஒருவர் பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு வந்திருந்த நிலையில், உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

அவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் அவரது ரத்த மாதிரிகள், புனேவில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், அவரது ரத்த மாதிரியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு நிபா வைரஸ் இருந்ததை உறுதி செய்துள்ளனர். இதனை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை; ஆனால்.. அமைச்சர் மா.சு. சொன்ன அதிர்ச்சி தகவல்!

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அவர், “நிபா வைரஸால் உயிரிழந்துள்ள இளைஞர் பெங்களூரில் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் இளைஞருடன் இருந்த நபர்களைக் கண்டறிய கேரள சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

அதில், அவருடன் தொடர்பில் இருந்ததாக 151 பேர் கொண்ட பட்டியலை தயார் செய்துள்ளது. மேலும், இறந்தவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவருடன் நெருங்கி பழகியவர்களில் 5 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பு நடவடிக்கைகள்: தற்போது கேரளாவில் நிபா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள தீவிர தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிபா வைரஸூக்கு தடுப்பூசிகள் ஏதும் இல்லாததன் காரணமாக, அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவும், முகக் கவசம் அணியும்படியும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.