ETV Bharat / bharat

"இனிமேல் இந்த செயலில் ஈடுபடமாட்டேன்"-பிரசாந்த் கிஷோர் எடுத்த திடீர் அதிரடி முடிவு!

இனிமேல் அரசியல் கட்சி ஆலோசகராக செயல்படமாட்டேன் என்றும் பீகாரின் கிராமப் பகுதிகளில் கட்சிப் பணியை முன்னெடுப்பதே முக்கியபணி என்றும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர் (Image credits-IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

கயா: கோடி கோடியாகப் பணம் பெற்றுக் கொண்டு அரசியல் ஆலோசனை மேற்கொள்ளும் பணிகளில் ஈடுபடப்போவதில்லை என்றும், பீகாரில் கிராமம் தோறும் தமது புதிய கட்சியை வளர்த்தெடுக்கப்போவதாகவும் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

பாஜக, திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு கடந்த காலங்களில் தேர்தலின்போது அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டார். தேர்தலின்போது அரசியல் யுக்திகளை வழங்கி அரசியல் கட்சிகளிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கட்டணமாகவும் பெற்றார். இந்த நிலையில் அண்மையில் அவர் பீகாரை தலைமையிடமாகக் கொண்டு ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

பீகாரில் வரும் 13ஆம் தேதி 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி போட்டியிடுகிறது. மேலும் பெலாஞ்ஜ் தொகுதியில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுகிறார். இதையடுத்து சமூக ஒற்றுமை குறித்து அங்கு அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரசாந்த் கிஷோர்,"அரசியல் கட்சிகளின் வெற்றிக்காக பணியாற்றிபோது கோடிக்கணக்கான ரூபாய் கட்டணமாக பெற்றேன்.இனி இந்தப் பணியை விட்டு விலகி இருக்க முடிவு செய்துள்ளேன்.பீகாரின் கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க உள்ளேன்.

இந்துக்கள், இஸ்லாமிய சகோதரர்களுடன் தோளோடு தோள் நின்று ஒற்றுமையாக நடைபோடும் சமுதாயத்தை நாம் கட்டமைக்க வேண்டும். வெறுமனே இஸ்லாமியர்களைப் பற்றி மட்டும் பேசினால், அவர்களின் மக்கள் தொகை வெறும் 20 சதவிகிதமாகத்தான் இருக்கிறது. இந்த சூழலில் நாம், இந்துக்கள், இஸ்லாமியர்களுடன் ஒன்றிணைந்து செல்லும் தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மண்ணெண்ணைய் வீட்டில் விளக்குகளை எரிக்க பயன்படுகிறது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக இந்த மண்ணெண்ணைய் விளக்குகள் எரிகின்றன. மண்ணெண்ணைய் விளக்குகளின் ஒளி எங்கு வேண்டுமானாலும் செல்லும். யார் ஒருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். ஜன் சுராஜ் கட்சி மட்டுமே உங்கள் வீட்டின் விளக்காக இருக்கும்,"என்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.