ETV Bharat / bharat

திருமணத்தின்போது மின்சாரம் தாக்கி மணமகன் உயிரிழப்பு.. ராஜஸ்தானில் சோகம்! - Groom Dies in rajasthan - GROOM DIES IN RAJASTHAN

Electrocuted In Groom In Rajasthan: ராஜஸ்தான் மாநிலத்தில், ஹால்டி விழாவின் போது மணமகன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Electrocuted In Groom In Rajasthan
Electrocuted In Groom In Rajasthan
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 9:37 PM IST

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், நந்தா மாவட்டம், பூண்டி சாலையில் உள்ள மேனல் ரெசிடென்சி ரிசார்ட்டில் நடைபெற்ற ஹால்டி விழாவின் போது, மணமகன் சூரஜ் சக்சேனா (30) என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையறிந்த குடும்பத்தினர், உடனடியாக மணமகனை உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, மணமகனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக உடலை நயாபுராவில் உள்ள எம்பிஎஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மணமகன் சூரஜ் சக்சேனா கோட்டாவில் உள்ள கேசவ்புரா பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.

ஹால்டி விழாவின் போது, மணமகன் ஏர் கூலரில் இணைக்கப்பட்ட வயரில் இருந்து பாய்ந்த மின்சாரத்தினால் உயிரிழந்தார் என தெரியவந்தது. திருமணத்திற்கு முன்னதாக மணமகன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது இரு வீட்டாருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை வழக்கு! சொத்துக்காக நடந்த கொலை! திடுக்கிடும் தகவல் வெளியீடு! - Karnataka Gadag Murder Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.