டெல்லி: டெல்லியின் சராய் ரோஹில்லா (Sarai Rohilla) ரயில் நிலையம் அருகே, படேல் நகர் - தயாபஸ்தி வழித்தடத்தில் ஜாகிரா மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயில்வே போலீசார் மற்றும் தீயணப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இரும்பு ஷீட் உருளைகளை ஏற்றி வந்த இந்த சரக்கு ரயிலின் 10 பெட்டிகள் தடம்புரண்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஜாகிரா மேம்பாலம் அருகே பகல் 11.52 மணி அளவில் ரயில் தடம்புரண்டதாக தகவல் வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.