ரட்லம்: மத்தியப் பிரதேச மாநிலம், ரட்லம் பகுதியில் பெட்ரோலியப் பொருட்களைக் கொண்ட சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் டெல்லி - மும்பை வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தபோது, சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பின்னர், இது குறித்து அறிந்த ரயில்வே துறையினர், மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
இதனையடுத்து, தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு பெட்டி மீட்கப்பட்டதாகவும், மீதமுள்ள இரண்டு பெட்டிகள் கிரேன் உதவியுடன் மீட்கப்படும் என்றும், ரயில் வழித்தடம் சீரமைக்கப்படும் எனவும் ரட்லம் மண்டல ரயில்வே மேலாளர் ராஜ்னிஷ் குமார் தெரிவித்தார்.