கஸ்கஞ்ச் : உத்தர பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளைஞர், கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி தனது 17 வயது தங்கையுடன் வீட்டில் இருந்து உள்ளார். இளைஞரின் தாய் உறவினர் வீட்டிற்கு சென்று இருந்த நிலையில், வீட்டில் அண்ணன், தங்கை மட்டும் தனிமையில் இருந்து உள்ளனர்.
பாலியல் வீடியோ பார்த்த இளைஞர், தன் அருகில் தூங்கிக் கொண்டு இருந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். மேலும், இது குறித்து தாயிடம் கூறிவிடக் கூடும் என்ற பயத்தை தங்கை என்றும் பாராமல் அந்த இளைஞர் கொலை செய்து சடலத்தை கிடத்தி உள்ளார். மறுநாள் இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் மாமா, போலீசில் புகார் அளித்து உள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தேதி இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் இளைஞர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இளைஞர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : அமெரிக்காவில் இந்திய மாணவர் சடலமாக மீட்பு! தொடரும் இந்தியர்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள்!