ETV Bharat / bharat

பீகார் முன்னாள் அமைச்சரின் தந்தை கொடூரக் கொலை! முன்விரோதம் காரணமா? - Bihar Minister Father Murder - BIHAR MINISTER FATHER MURDER

பீகார் முன்னாள் அமைச்சரின் தந்தை சொந்த வீட்டில் வைத்தே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Mukesh Sahani, ex-Bihar minister (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 10:16 AM IST

தர்பங்கா: பீகார் மாநிலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி அமைந்த போது அவரது அமைச்சரவையில் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையை கவனித்து வந்தவர் முகேஷ் சஹானி. இவர் விகாஷீல் இன்சான் என்ற கட்சியையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் இடையே ஏற்பட்ட விரிசலை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய முகேஷ் சஹானி, தற்போது ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இந்தியா கூட்டணியில் அங்கம் விகிக்கிறார். மும்பையில் முகேஷ் சஹானி இருக்கும் நிலையில் அவரது தந்தை ஜிதன் பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள சுபால் பஜார் என்ற பகுதியில் தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ஜிதன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பூர்வீக வீட்டின் கட்டிலில் மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதத்தை கொண்டு படுகொலை செய்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜிதனின் உடலை கண்டு அதிர்ந்து போன அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜிதனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்ம், ஜிதன் கூர்மையான ஆயதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டு இருப்பதை போலீசார் உறுதி செய்து உள்ளனர். இருப்பினும் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், முன்விரோதத்தால் கொலை நடந்ததா அல்லது வேறெதும் காரணமா என்றும் விசாரித்து வருவதாக போலீசார் கூறினர்.

மேலும், பீகார் முன்னாள் அமைச்சரின் தந்தை வீடு புகுந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவரான முகேஷ் சஹானி, மாநிலத்தில் நன்கு அறியப்பட்ட அரசியல் முகமாக காணப்படுகிறார். மேலும் அவர் சார்ந்த சமூதாயத்தின் மக்கள் தொகை மாநிலத்தில் 12 சதவீதம் என்கிற அளவில் உள்ளதால் ஆதிக்கம் செலுத்தக் கூடிய தலைவர்களில் ஒருவராகவும் அவர் அறியப்படுகிறார்.

இதையும் படிங்க: சுற்றுலா பேருந்து - டிராக்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 5 பேர் பலி! - Bus Tractor Collision Near Mumbai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.