ஹைதராபாத்: ஆந்திர பிரேதச முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி ருஷிகொண்டாவில் கட்டியுள்ள அரண்மனையும், அதற்கான செலவுகளும் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு உள்ளது.
படுக்கை அறையில் ஆரம்பித்து முகம் பார்க்கும் கண்ணாடி, குளியல் டப், கழிப்பறையில் உள்ள கபோடுகள், வால் சீட்டுகள் என அனைத்துமே வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டவை. பணக்காரர்கள் கூட வாயை பிளக்கும் அளவிற்கு ஒவ்வொன்றும் மிக ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிலும், படுக்கையறை மிகச் சிறப்பாகவும், அதிக செலவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பேட் ரூம்: படுக்கையறை வெளிர் தங்க நிறத்தில் மின்னுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கிரானைட்கள் எல்லாம் இத்தாலிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. மேலும், மெத்தை, மேட்ரஸ், நாற்காலிகள், டேபிள்கள் என அனைத்தும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்ட அலமாரிகள் பதிக்கப்பட்டுள்ளது. மிக ஆடம்பரமான முறையில் ஸ்பா மற்றும் டாய்லெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. டாய்லெட்டில் உள்ள கமோடு ஜப்பான் வடிவமைப்பைக் கொண்டது. மேலும், டாய்லெட்டில் வைப்பதற்காக சில பொருட்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். அவைகளின் மதிப்பு ரூ.15 லட்சமாகும்.
கிரானைட் மற்றும் மார்பிள் இறக்குமதி: கிரானைட் மற்றும் மார்பிள்ஸ் வியட்நாம், ஸ்பெயின், நார்வே, இத்தாலி, பிரேசில் உள்ளிட்ட ஐந்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், படுக்கையறைகள் மற்றும் மீட்டிங் ஹால்கள் பிரகாசமாக ஜொலிக்கும் வகையில், வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வடிவங்களை உருவாக்குவதற்காக சுவர்களில் மார்பிள்ஸ் பதிக்கப்பட்டுள்ளன.
தோட்டம்: வீட்டிற்கு வெளியே தோட்டம் அமைக்க, ஆயிரம் செடிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தோட்டம் அமைத்துள்ளனர். அவைகள் மீது வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். இவற்றிற்கு மட்டும் ஏறத்தாழ ரூ.20 கோடி வரை செலவு செய்துள்ளனர்.
அரண்மனை போல் அமைந்திருக்கும் இந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு ரூம்மிற்கும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் எலக்ட்ரிசிட்டி வேலை பார்த்துள்ளனர். இது எல்லாமே வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டன. வீட்டின் வெளிப்புற சுவர்களை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் மின்விளக்குகள் எல்லாம் டெல்லியிலிருந்து வாங்கப்பட்டவை. அவை ஒவ்வொன்றும் ரூ.26 ஆயிரமாகும். மேலும், வீட்டிற்கு உள்ளே உள்ள சுவர்களை அலங்கரிப்பதற்கு மட்டும் 4 ஆயிரம் மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு தெலுங்கு தேசம் கட்சி ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
இதையும் படிங்க: 41 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! யார் இந்த KNR குரூப்? - 41 Airports get bomb threat