ஸ்ரீநகர்: லடாக் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே தெளலத் [பெக் ஒல்டி பகுதியில் இந்திய ராணுவத்தின் T-72 tank வாகனம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டாங்ஸ்டே நோக்கி இந்திய ராணுவத்தின் வாகனம் சென்று கொண்டு இருந்த நிலையில் மந்திர் மோர்க் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் ராணுவ வாகனம் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அதில் பயணித்த 5 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் ஜூனியர் கமிஷன்டு அதிகாரி மற்றும் 4 வீரர்கள் என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து முழுத் தகவலும் கிடைத்த பின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த வீரர்கள் யாரென்று அறிக்கை வெளியிடப்படும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் தான் கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லக் கூடிய பாதையில் அதிகாலை மூன்று மணி அளவில் விபத்து அரங்கேறியதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "லடாக்கில் ஆற்றின் குறுக்கே கடக்கும் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
Deeply saddened at the loss of lives of five of our brave Indian Army soldiers in an unfortunate accident while getting the tank across a river in Ladakh.
— Rajnath Singh (@rajnathsingh) June 29, 2024
We will never forget exemplary service of our gallant soldiers to the nation. My heartfelt condolences to the bereaved…
தேசத்திற்காக நமது துணிச்சலான வீரர்களின் முன்மாதிரியான சேவையை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்க நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "லடாக்கில் ஆற்றைக் கடக்கும் போது ராணுவ வாகனம் விபத்தில் சிக்கி 5 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. வீரமரணம் அடைந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் எனது பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன்.
लद्दाख में टैंक के नदी पार करने के सैन्य अभ्यास के दौरान हुए हादसे में भारतीय सेना के पांच जवानों की शहादत का समाचार अत्यंत दुखद है।
— Rahul Gandhi (@RahulGandhi) June 29, 2024
सभी शहीद जवानों को विनम्र श्रद्धांजलि अर्पित करते हुए शोक संतप्त परिजनों के प्रति गहरी संवेदनाएं व्यक्त करता हूं। दुख की इस घड़ी में हम उनके साथ…
அதே வேளையில், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர நேரத்தில் நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம். அவர்களது அர்ப்பணிப்பு, சேவை மற்றும் தியாகத்தை நாடு எப்போதும் நினைவில் கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் வழக்கு; திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக் அமலாக்கத்துறையால் கைது! - jaffer sadiq case