ETV Bharat / bharat

Fact Check; மும்பை சிவ் சேனா ரோட் ஷோவில் பாகிஸ்தான் கொடி காட்டப்பட்டதா? உண்மை என்ன? - Pakistan Flag At Shiv Sena Roadshow - PAKISTAN FLAG AT SHIV SENA ROADSHOW

Boom Fact Check : தெற்கு மும்பையில் சிவ் சேனா வேட்பாளர் அனில் தேசாய் ரோட் ஷோ நடைபெறும் போது, பாகிஸ்தான் கொடி காணப்பட்டதாக தவறான கூற்றுடன் பகிரப்படுவது கண்டறியப்பட்டது. இந்தக் கட்டுரையானது சமூக ஊடகங்களில் கூறப்படும் உரிமை கோரல்களை உண்மையாகச் சரிபார்த்து, அது ஏன் தவறான உரிமை கோரல் என்பதற்கான உண்மைகளுடன் தெளிவு பெறச் செய்யும்.

அனில் தேசாய்
அனில் தேசாய் (Photo credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 8:36 PM IST

Updated : May 30, 2024, 12:46 PM IST

ஹைதராபாத்: மும்பையில் மக்களவைத் தேர்தல் நாளை (மே 20) நடைபெறுகிறது. இந்த தேர்தலில், சிவ் சேனா (UBT) இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், NCP (சரத்பவார்) இணைந்து பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு எதிராக போட்டியிடுகிறது.

இந்நிலையில், பாஜக தலைவர் நிலேஷ் ரானே தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "சிவ் சேனா ஊர்வலத்தில் பாகிஸ்தான் கொடி இடம்பெற்றுள்ளதாகவும், இனி PFI, SIMI, AL QAEDA ஆட்கள் மாடோ ஸ்ரீக்கு பிரியாணி எடுத்துச் செல்வார்கள். மும்பையில் தாவூத்-க்கு ஒரு நினைவிடம்கூட கட்டப்படும்" எனப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இதே வீடியோ இதே தலைப்புடன் பேஸ்புக்கில் பரவலாகப் பகிரப்பட்டது. அந்த பதிவில், "செம்பூரில் UBT வேட்பாளர் அனில் தேசாய் பிரசாரம். இந்தியாவில் ஒரு பாகிஸ்தான் கொடி. விரக்தியைப் பாருங்கள். பாலாசாகேப் எப்படி உணருவார். மகாராஷ்டிரா தேர்தல் ஆணையம் பொருத்தமான பதிலைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்" எனப் பகிரப்பட்டது.

உண்மை - சரிபார்ப்பு (Fact - Check): மும்பை செம்பூரில் சிவ் சேனா தலைவர் அனில் தேசாய் ரோட் ஷோவில் வைரலான வீடியோவில் உள்ள கொடி இஸ்லாமியக் கொடி என்றும், சமூக ஊடகப் பதிவுகளில் கூறப்படுவது போல் பாகிஸ்தான் கொடி இல்லை என்றும் BOOM கண்டறிந்துள்ளது.

வைரலான வீடியோவைப் பார்க்கும் போது, அந்தக் கொடி இஸ்லாமியக் கொடியே தவிர, பாகிஸ்தான் கொடி அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. வீடியோவில் காணப்படும் பச்சைக் கொடியில் வெள்ளை நிற பிறை மற்றும் நடுவில் நட்சத்திரம் உள்ளது.

இந்த கொடி பெரும்பாலும் மொஹரம் மற்றும் ஈத் மிலாத்-உன்-நபி ஊர்வலங்களில் காணப்படும். வைரலான வீடியோவில் உள்ள கொடியிலும் வெள்ளைப் புள்ளிகள் உள்ளன. அதேநேரம், பாகிஸ்தானின் தேசியக் கொடியிலும், இடது புறத்தில் வெள்ளை நிற நெடுவரிசை உள்ளது.

இரண்டு கொடிகளுக்கு இடையிலான ஒப்பீடு:

செம்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை வீடியோ குறிப்பு பெறப்பட்டது. செம்பூர் பகுதி கூகுள் மேப்பில் சோதனை செய்யப்பட்டது. வைரலான வீடியோ செம்பூர் ஸ்டேஷன் அருகே உள்ள சாலையில் படமாக்கப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டது. செம்பூரில் உள்ள 5PL லோகண்டே மார்க்கில் உள்ள அதே மேம்பாலம் மற்றும் கட்டடங்களை மேப்பில் பார்க்கும் போது அது வைரலான வீடியோவுடன் பொருந்தியது.

2024 மே 14 அன்று செம்பூரில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை தேசாய் நடத்தினார். இன்ஸ்டாகிராம் பதிவுகள் ரோட் ஷோ மற்றும் அது நடைபெற்ற இடங்களைக் குறிப்பிடுகின்றன. இந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது சிவ் சேனாவுக்கு மும்பையில் உள்ள முஸ்லீம்களின் ஆதரவு கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

முடிவு: மும்பை செம்பூரில் சிவ் சேனா தலைவர் அனில் தேசாய் ரோட்ஷோவில் வைரலான வீடியோவில் உள்ள கொடி இஸ்லாமிய கொடி என்றும் சமூக ஊடகப் பதிவுகளில் குறிப்பிடுவது போல் பாகிஸ்தான் கொடி இல்லை.

Note: This story was first published in Boom as part of Shakti Collective and translated by ETV Bharat Tamil Nadu

இதையும் படிங்க: ஆம் ஆத்மி போராட்டம் எதிரொலி: டெல்லியில் 144 தடை உத்தரவு - 144 Imposed In Delhi

Last Updated : May 30, 2024, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.