ETV Bharat / bharat

கேரளா முதலமைச்சரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு! என்ன காரணம்? - ED case against kerala CM Daughter - ED CASE AGAINST KERALA CM DAUGHTER

Veena Vijayan: கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீனா விஜயன் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து உள்ளது.

veena vijayan
veena vijayan
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 3:54 PM IST

டெல்லி : தனியார் சுரங்க நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடியே 76 லட்ச ரூபாய் பணம் பெற்றதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீனா விஜயன் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீனா விஜயன் எக்சாலாஜிக் (Exalogic) என்ற மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், கொச்சியை சேர்ந்த தனியார் சுரங்க தொழில் நிறுவனமான சிஎம்ஆர்எல், வீனா விஜயனின் மென்பொருள் நிறுவனத்திடம் எந்த விதமான சேவையையும் பெறாமல் ஏறத்தாழ 1 கோடியே 76 லட்ச ரூபாய் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக மத்திய கார்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் விசாராணை அமைப்பான தீவிர மோசடி புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளது.

மத்திய கார்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் புலனாய்வு அமைப்பு அளித்த பரிந்துரையை அடுத்து சட்டவிரோத பணப் பரிவர்த்தணை பிரிவின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வழக்கில் தொடர்புடையை அனைவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட கொச்சின் மினரல் மற்றும் ருடைல் லிமிடெட் (சிஎம்ஆர்ல்) நிறுவனம் கேரளாவில் தாது மணல்களை அள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீனா விஜயனுக்கு கடந்த 2018 முதல் 2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு கோடியே 76 லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

முன்னதாக மத்திய கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் புலானாய்வு அமைப்பு இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்கக் கோரி வீனா விஜயனின் எக்சாலாஜிக் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தான் அமலாக்கத்துறையின் கேரளா பிரிவு வீனா விஜயனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அந்நிய செலாவணி முறைகேடு வழக்கு - திரிணாமுல் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவுக்கு மீண்டும் சம்மன்! - ED Summon Mahua Moitra

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.