டெல்லி: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், செயற்கை நுன்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தேர்தல் பிரசாரங்களுக்காக தயாரிக்கப்பட்ட வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் அமீர் கான் ஆகியோர் தொடர்புடைய டீப் பேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக டீப் பேக் செயற்கை நுண்ணிறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் பிரசார வீடியோக்களை தயாரிக்க கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு முன்னர் டீப் பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வீடியோக்களை தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற மூன்று மணி நேரத்திற்குள் சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக சட்டத்திற்கு புறம்பான தகவல்கள் குறித்து புகாரளிக்கும் தங்கள் கட்சியின் பொறுப்பாளருக்கு எச்சரிக்கை வழங்கவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மறைந்த தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்வது போல் டீப் பேக் வீடியோக்களை தயாரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்! அமலாக்கத்துறை கைது எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு! என்ன திட்டம்? - Hemant Soren Released