ETV Bharat / bharat

மக்களவை தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி - இந்திய தேர்தல் ஆணையம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 4:11 PM IST

Updated : Feb 10, 2024, 2:24 PM IST

Election Commission Voters List: மக்களவை தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி : மக்களவை தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் எண்ணிக்கை 6 சதவீதம் உயர்ந்து உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

மேலும், நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறை வாக்காளர்கள் 2 கோடி பேர் உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது. உலக அளவில் அதிக வாக்காளர்கள் எண்ணிக்கை கொண்ட ஒரே நாடு இந்தியா என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

அதேபோல் பாலின விகிதமும் நாட்டில் அதிகரித்து உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு 940 என்ற அளவில் இருந்த பாலின் விகிதம் நடப்பாண்டில் 948ஆக அதிகரித்து உளளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. வாக்காளர் பட்டியல் சேர்ப்பு, வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் வெளிப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

புனேயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான பல்வேறு பணிகள் விக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க : கூகுள் பார்ட் ஏஐ ஜெமினி என பெயர் மாற்றம்: மாத சந்தா எவ்வளவு தெரியுமா?

Last Updated : Feb 10, 2024, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.