ETV Bharat / bharat

12 மாநிலங்களவை இடங்களுக்கு செப்டம்பர் 3 இல் தேர்தல்..! - Rajya Sabha election - RAJYA SABHA ELECTION

Rajya Sabha election 2024: நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 எம்.பி., இடங்களுக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 5:55 PM IST

Updated : Aug 7, 2024, 6:00 PM IST

புதுடெல்லி: அசாம், பீகார், தெலுங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் கேசவ ராவ் மற்றும் ஒடிசாவில் மமதா மகோந்தா ஆகியோர் கடந்த ஜூலை மாதம் ராஜ்யசபா பதவிகளை ராஜினாமா செய்தனர். அதேபோல, அசாம், பீகார் , ஹரியானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் பதவி வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எம்பி-யாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த காரணங்களால் மேற்கண்ட 12 மாநிலங்களவை இடங்களும் காலியாகின. இந்நிலையில், 9 மாநிலங்களில் 12 மாநிலங்களவை இடங்களை தேர்தல் ஆணையம் காலி என அறிவித்து வரும் செப்டம்பர் 3 மேற்கண்ட இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 14 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கி, ஆகஸ்ட் 21 அன்று நிறைவடையும். ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். வாக்குப்பதிவு செப்டம்பர் 3ம் தேதி தொடங்கி அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "வயநாட்டின் வலியை நேரில் பார்த்தேன்" - நாடாளுமன்றத்தில் உருகிய ராகுல் காந்தி!

Last Updated : Aug 7, 2024, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.