ETV Bharat / bharat

10 ஆண்டுகளுக்கு பின் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல்! தேர்தல் தேதி எப்போ? - Jammu Kashmir Assembly Election

ஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் சட்டப் பேரவை தேர்தல் நடத்தும் அறிவிப்பை இன்று மதியம் 3 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

Etv Bharat
Election Commission of India logo (ECI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 16, 2024, 11:50 AM IST

Updated : Aug 16, 2024, 12:05 PM IST

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக - மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சி கவிழ்ந்த பின் அங்கு இன்னும் சட்டப் பேரவை தேர்தல் நடத்தப்படவில்லை. கடைசியாக 2014ஆம் ஆண்டு அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதன்பின் 10 ஆண்டுகளாக அங்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவில்லை.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர், ஹரியானாவில் தேர்தல் நடத்துவது குறித்து கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மத்திய உள்துறை செயலாளர் அஜெய் பல்லாவுடன் இந்திய தேர்தல் அணையம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து இன்று (ஆக.16) மதியம் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடுகிறது.

இந்த ஆண்டு இறுதியுடன் மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவையும் காலாவதியாக உள்ளதால் அது குறித்தும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முப்தி வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெற்றதை தொடர்ந்து பாஜக - மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது.

அதன் பின் ஜம்மு காஷ்மீரை மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. இதனிடைய ஜம்மு காஷ்மீரில் மீண்டும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தக் கோரி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூடி பேசி ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்திய தேர்தல் ஆணைய குழு ஜம்மு காஷ்மீர் விரைந்து தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது.

அதேபோல் ஹரியானாவிலும் வரும் நவம்பர் 3ஆம் தேதியுடன் சட்டப் பேரவை காலாவதியாகிறது. அங்குள்ள 90 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிடுகிறது. முன்னதாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தன.

அண்மையில் பாஜக - ஜனநாயக ஜனதா கட்சியின் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கு ஹரியானாவில் 31 எம்எல்ஏக்கள் உள்ளனர். 2024ஆம் ஆண்டு ஜனதா கட்சியும் - காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையும் இந்த ஆண்டு இறுதியில் காலாவதியாகிறது. விரைவில் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ராமோஜி பிலிம் சிட்டியில் 78வது சுதந்திர தின விழா கோலாகலம்! - Ramoji Film City Hyderabad

Last Updated : Aug 16, 2024, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.