ETV Bharat / bharat

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் - டிஜிசிஏ உத்தரவு! என்ன காரணம் தெரியுமா? - ஏர் இந்தியா டிஜிசிஏ அபராதம்

DGCA Fines Air India in Wheelchair Issue: வீல் சேர் பற்றாக்குறை காரணமாக ஏர் இந்தியா பயணி 1 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் விமான நிறுவனத்திற்கு டிஜிசிஏ 30 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 7:43 PM IST

டெல்லி : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில், 80 வயது மதிக்கத்தக்க முதியவர் பயணித்து உள்ளார். விமான நிலையத்தில் விமான ஊழியர்களிடம் சக்கர நாற்காலி கோரி இருந்த நிலையில், பற்றாக்குறை காரணமாக முதியவருக்கு வீல் சேர் வழங்கப்படவில்லை.

இதையடுத்து விமான நிலையத்தின் இமிகிரேஷன் முனையத்திற்கு ஏறத்தாழ 1 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதியவர் நடந்து சென்ற முதியவர் திடீரென நிலைதடுமாறி சரிந்து விழுந்து உள்ளார். முதியவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏறத்தாழ நான்கு நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி சிகிச்சை பலனனின்றி முதியவர் உயிரிழந்தார். முதியவருக்கு லேசான மாரடைப்பு மற்றும் பல்வேறு இணை நோய்கள் இருந்ததன் காரணமாக உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறியதாக, விமானப் போக்குவரத்து இயக்குநரகமான டிஜிசிஏ, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதில் சம்பவம் குறித்து 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 30 லட்ச ரூபாய் அபராதம் விதித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. ஏர் இந்தியாவின் விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை எனக் கூறிய டிஜிசிஏ அதனால் அபராதம் விதித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமானம் ஏறும் மற்றும் இறங்கும் போது உதவி தேவைப்படும் பயணிகளுக்கு போதுமான சக்கர நாற்காலிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. அண்மைக் காலமாக விமான நிலையங்களில் வீல் சேர் பற்றாக்குறை விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், வீல் சேரில் வந்த பயணியை, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் எழுந்து நிற்கக் கூறியதாக ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : "ஒன் சாய் ப்ளீஸ்" - நாக்பூர் சாலையில் டீ அருந்தும் பில் கேட்ஸ்! வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.