புதுடெல்லி: தீபாவளி தினத்தன்று விதிமுறைகளை மீறி டெல்லியில் ஏராளமானோர் பட்டாசுகள் வெடித்ததில் இன்று காற்றின் தரம் மிகவும் மோசமானதாக மத்திய சுற்றுசூழல் கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது.
டெல்லியில் தீபாவளி தினத்தன்று கிழக்கு டெல்லி மற்றும் மேற்கு டெல்லி பகுதிகளான லஜ்பத் நகர், கல்காஜி, சத்தர்பூர், ஜௌனாபூர், கைலாஷ் கிழக்கு, சாகேத், ரோகினி, துவாரகா, பஞ்சாபி பாக், விகாஸ் புரி, தில்ஷாத் கார்டன்,புராரி உள்ளிட்ட பகுதிகளிலும், அதற்கு அருகாமை பகுதிகளிலும் ஏராளமானோர் பட்டாசுகளை வெடித்தனர்.
இதன்காரணமாக டெல்லி-என்சிஆர் பகுதிகளில் காற்றின் தரம் வெள்ளிக்கிழமையன்று மேலும் மோசமடைந்தது ஒரு நச்சு போர்வை போர்த்தியது போல டெல்லி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்திருந்தது. மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி சராசரி காற்றின் தரக்குறியீடு டெல்லியில் காலை 7.30 மணி வரை 361 ஆக இருந்தது.
மூன்று ஆண்டுகளில் மிகவும் சூழல் குறைபாடான தீபாவளியாக இருந்தது. பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 350 ஆக பதிவாகி இருந்தது. புராரி கிராசிங் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 392 ஆகவும், சோனியா விஹாரில் 395 ஆகவும் பதிவாகி இருந்தது. டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரம் மிகவும் குறைவான நிலையில் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டோர்,மேலும் சாலையோரம் வசிப்போர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
தீபாவளியன்று தீ விபத்துகள்: டெல்லியில் தீபாவளியன்று தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு 300 அழைப்புகள் வந்தன. உயிருக்கு அச்சுறுத்தலான தீ விபத்து ஏதும் நேரிடவில்லை. டெல்லியைப் போலவே ஹரியானா, பஞ்சாப் ஆகிய அண்டை மாநிலங்களில் பல்வேறு பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமாக பதிவாகி இருந்தது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்