டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்தார். இவர் டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இருப்பினும் டெல்லி முதலமைச்சர் அலுவலகம் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார். அதிஷி பொறுப்பேற்றதையடுத்து, அவர் அரசு பங்களாவில் குடியேறினார். இந்த நிலையில், டெல்லி முதல்வர் அதிஷியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று, சீல்வைத்ததாகவும், அவரது வீட்டில் இருந்த உடைமைகள் அகற்றப்பட்டதாகவும் முதல்வர் அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
LG सॉब मीडिया में प्लांट कर रहे हैं कि दिल्ली की CM आतिशी का सामान CM हाउस से इस लिए बाहर फेंका गया क्योंकि उन्होंने CM हाउस की चाबी पीडब्ल्यूडी को नहीं दी थी। आतिशी जी का सामान बाहर फेंकने के बाद अब घर के अंदर की inventory ली जाएगी और उसके बाद उन्हें घर allot किया जाएगा।
— Saurabh Bharadwaj (@Saurabh_MLAgk) October 9, 2024
இதையும் படிங்க: முதுகலை மருத்துவ மாணவர் கலந்தாய்வு: மத்திய அமைச்சர் நட்டாவுக்கு மருத்துவ சங்கம் கடிதம்!
இது குறித்து டெல்லி முதல்வர் அலுவலகத்தில் வெளியிட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, "பிளாக் ஸ்டாப் சாலையில் அமைந்துள்ள அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம், பாஜகவின் உத்தரவின் பேரில் வலுக்கட்டாயமாக காலி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் வி.கே.சக்சேனா, அந்த இல்லத்தை பாஜக தலைவருக்கு ஒதுக்க விரும்புகிறார்” என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநர் அலுவலகம் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்