கொல்கத்தா: டாடா புயல் மேற்கு வங்கத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில் மின்சார வசதியும் தடைபட்டுள்ளது.
தானா புயல் மணிக்கு 100-110 கிமீ காற்றின் வேகத்துடன் ஒடிசாவின் பிடர்கனிகா மற்றும் தாம்ரா இடையே கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்ததன் விளைவாக மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொல்கத்தா நகரில் கனமழை பெய்ததால், நகரின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. கொல்கத்தாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பவானிபூர், புதிய சந்தை, ஹஸ்ரா, தர்மதாலா மற்றும் பெஹாலா உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Frontline workers of the S&D Department in action across the city, operating the Jetting cum Suction Machine to clear off gully-pits & manhole chambers.#CycloneDana #CycloneUpdate #cyclone_Dana #KMConDuty pic.twitter.com/TlrOpgu19q
— Kolkata Municipal Corporation (@kmc_kolkata) October 25, 2024
கொல்கத்தாவில் மட்டும் இன்று காலை 11.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 100 மிமீ மழை பெய்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொல்கத்தா மாநகராட்சிக்கு சொந்தமான மருத்துவமனை, கொல்கத்தா தேசிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய இடங்களில் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : "ஒருங்கிணைந்த பணிகளால் டானா புயலால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை" -ஒடிசா முதலமைச்சர் மோகன் மாஜி பேட்டி
கிழக்கு மிட்னாப்பூர், தெற்கு 24 பாரகனா ஆகிய மாவட்டங்களில் டானா புயலால் கடும் சேதங்கள் நேரிட்டுள்ளன. தெற்கு 24 பாரகனா மாவட்டத்தில் உள்ள பதர்பிரதிமா பகுதியில் கேபிள் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் புயல் காற்று காரணமாக கீழே விழுந்து உயிரிழந்தாக அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே டானா புயல் கரையை கடந்ததையடுத்து நேற்று இரவு முதல் கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்காணிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து இன்று காலையிலும் மாநிலம் முழுவதும் உள்ள நிலவரம் குறித்து ஆய்வும் மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுமாறு அமைச்ச்சர்களுக்கும் முதலமைச்சர் மம்தா உத்தரவிட்டுள்ளார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி,"டானா புயல் தாக்கத்தின் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளார். தேவையெனில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மாநில அரசு உதவி செய்யும்," என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்