புவனேஸ்வர்: டானா புயல் மணிக்கு 110 கிமீ வேகத்துடன் கூடிய காற்று,கனமழையுடன் ஒடிசா அருகே வியாழக்கிழமை நள்ளிரவு கரையை கடந்த நிலையில் மாநிலத்தில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மோகன் மாஜி ஆய்வு மேற்கொண்டார்.
ஒடிசாவின் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மோகன் மாஜி,"புயல் மழைக்கு ஒருவர் கூட உயிரிழக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. புயல் கரையை கடந்த உடனேயே நேற்று நள்ளிவரவு முதலே மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இயல்பு நிலை திரும்பி விடும்.
At/po- boulakani ,block- mahakalapada
— Odisha Fire & Emergency Services (@OdishaF_ES) October 25, 2024
Dist- Kendrapada about 9.30 hrs#CycloneDana @IPR_Odisha @CMO_Odisha @SRC_Odisha pic.twitter.com/p0Zbpz5IVm
புயலால் நேரிட்ட சேதங்கள் குறித்து மதிப்பிடும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்த பகுதிகளில் மரங்களை அப்புறப்படுத்தி சாலை போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே போல மின் சேவை இன்று மாலைக்குள் சீரடையும்.
இதையும் படிங்க: ஒடிசாவின் 11 மாவட்டங்களில் இரண்டாவது நாளாக கனமழை...பூரி-சாகர் தீவுக்கு இடையே டானா புயல் கரையை கடக்கும் என கணிப்பு!
தேசிய பேரிடர் மேலாண்மை படையினர், ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படையினர், தீயணைப்பு படையினர், சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால்தான் புயலின் தாக்கம் குறைக்கப்பட்டது.
Rainfall Warning : 25th October 2024
— India Meteorological Department (@Indiametdept) October 25, 2024
वर्षा की चेतावनी : 25th अक्टूबर 2024
The severe cyclonic storm “DANA” moved north-northwestwards with a speed of 10 kmph and weakened into a cyclonic storm over north coastal Odisha and lay centred near latitude 21.20° N and… pic.twitter.com/if0bCCbuHH
விமானப்போக்குவரத்து இன்று காலை முதலே சீராகிவிட்டது. குறிப்பாக புயல் மையம் கொண்டிருந்த சூழலில் 4,421 கர்பிணிகள் அரசின் பாதுகாப்பின் கீழ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 1,600 பேருக்கு குழந்தைகள் பிறந்துள்ளன. அனைவரும் உடல் நலத்துடன் பாதுகாப்பாக உள்ளனர். பூரி ஜெகனாதரின் கருணையால் பெரும் அளவுக்கு புயலால் பாதிப்பு இல்லை,"என்றார்.
இதனிடையே ஒடிசாவில் கரையை கடந்த புயலானது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்தது என ஒடிசா மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்