ETV Bharat / bharat

அருணாசல பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்! என்ன காரணம்? - Lok Sabha Election - LOK SABHA ELECTION

Counting date change: அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியை ஜூன் 2ஆம் தேதிக்கு மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 4:46 PM IST

Updated : Apr 3, 2024, 3:33 PM IST

டெல்லி: அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முன்னர் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஜூன் 2ஆம் தேதியாக மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், ஜூன் 2ஆம் தேதியே இரண்டு மாநில சட்டப்பேரவைகளுக்கான பதவிக் காலம் காலாவதியாக உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையை முன் கூட்டியே நடத்துவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

அதேநேரம் அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. நடப்பாண்டில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

60 தொகுதிகளை கொண்ட அருணாசல பிரதேசத்திற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 20ஆம் தேதி அருணாசல பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதேபோல், 32 இடங்களை கொண்ட சிக்கிம் மாநிலத்திற்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதையும் படிங்க : அருணாசல பிரதேசம், சிக்கிமில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல்!

Last Updated : Apr 3, 2024, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.