ETV Bharat / bharat

டெல்லியில் தொடங்கிய எம்.எஸ்.சுவாமிநாதனின் பயணம் - நெஞ்சை சிலிர்க்கும் விவசாயத்தின் மீட்பு..!

Bharat Ratna Scientist M.S.Swaminathan: பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட பசுமை புரட்சியின் தந்தையும் வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் டெல்லி ஜாண்டி கிராமத்திற்குமான அளப்பரிய தொடர்பை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

Bharat Ratna Scientist M.S.Swaminathan
பாரத ரத்னா எம்.எஸ்.சுவாமிநாதன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 10:46 PM IST

Updated : Feb 11, 2024, 5:27 PM IST

டெல்லி: மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும், வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா, உணவு களஞ்சியம் என்ற மற்றொரு பெயருடன் வீரநடையிட்டு வருகிறது. உணவு களஞ்சியமாக இயங்கும் தற்போதைய இந்தியா ஒரு காலத்தில் பட்டினி மற்றும் பஞ்சத்தில் தவித்ததை யாராலும் மறுக்க முடியாத உண்மையே. அந்த தவிப்பில் இருந்து இந்தியா மீண்ட யுக்திகள், அதற்கான காரணம் என வாய் திறந்தால், அந்த முயற்சிகளில் எம்.எஸ். சுவாமிநாதனின் பங்கு மறக்கவும் மறுக்கவும் முடியாதவை.

யார் இந்த சுவாமிநாதன்.. அப்படி என்ன செய்துவிட்டார் இவரைக் கொண்டாட..?: பொதுவாக நம் நாட்டில் ஒரு கவனிக்கதக்க பழக்கம் உண்டு. அதாவது அழிவின் விளிம்பில் இருக்கக் கூடிய உயிரினங்களை பாதுகாக்க அதனை தேசிய சின்னமாகவோ அல்லது அளப்பறிக்கும் குறியாக மாற்றுவர். அந்த வகையில் பிரிட்டிஷார் விட்டுச் சென்ற சுதந்திர இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருந்தது விவசாயம். மக்களின் பசிக்கும், பஞ்சத்திற்கும் வழி தெரியாமல் ஓரம் நின்றனர் தலைவர்கள்.

அந்த காலகட்டத்தில் நாட்டு மக்களின் பஞ்சத்தை தன் தோளில் சுமந்தவர் தான் இந்த எம்.எஸ். சுவாமிநாதன். இன்றளவும் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் நடைபெற்ற பல்வேறு புரட்சிகளில் மக்கள் மத்தியில் பெரும் மதிப்பையும், தீர்க்கத்தையும் பெற்ற புரட்சி என்றால் அது எம்.எஸ்.சுவாமிநாதனின் பசுமை புரட்சியே.

மக்களின் பட்டினியை மட்டுமின்றி, தொலைநோக்கு விவசாயத்தையும் முன்னெடுத்தவர் என்றே பெருமை சாடலாம். இவருக்கும் டெல்லியிலுள்ள ஜாண்டி கிராமத்திற்குமான தொடர்பு கேட்போரை உணர்ச்சியடைய செய்வதில் தவறியதில்லை. ஒரு கட்டத்தில் இந்தியாவில் விவசாயத்தை மறுக்கத் துவங்கிய விவசாயிகளை அவரது பலமான யோசனைகளுடன் கைகோர்க்க வலியுறுத்தினார்.

அவருடைய நாளைய பசுமை இந்தியா என்ற யோசனைகளுக்கும், அறிவுறுத்தல்களுக்கும் தலையசைத்து விவசாயிகள் அவர் பக்கம் நிற்கத் துவங்கினர். அதில் டெல்லியில் உள்ள ஜாண்டி கிராமத்தின் பங்கு எண்ணிலடங்காதவை. தனது 60வது வயதில் முதல் முறையாக ஜாண்டி கிராமத்திற்கு சென்ற எம்.எஸ்.சுவாமிநாதன் அவருடைய விவசாயத்தில் அவர் கொண்ட புதிய யோசனைகளால் அப்பகுதியில் விவசாயம் மட்டுமின்றி விளைச்சலையும் அதிகரிக்கச் செய்தார். அதனால் அப்பகுதியில் விவசாயம் செழித்தது.

விவசாயத்தை முன்னெடுக்கும் ஒவ்வொருவரின் வீட்டில் ஒரு கார் நிற்கும் அளவிற்கு சமூதாயத்தில் ஒரு புரட்சி ஏற்படும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியதாக இன்றளவும் அம்மக்கள் நினைவு கூறுகின்றனர். அது மட்டுமின்றி 1967ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியினால் தொடங்கப்பட்ட விதைகளுக்கான ஆய்வுக் கூடத்தில் எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்கு அளப்பறியது என்று நினைவு கொள்கின்றனர் அக்கிராம மக்கள்.

மரபணு ஆராய்ச்சிகளில் கண்ட வெற்றியின் மூலம், 1964ஆம் ஆண்டு அக்கிராம மக்களில் இருந்து தொடக்கம் காண்பதற்கு கோதுமை விதைகள் கொடுக்கப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக அமோகமான விளைச்சலை எட்டியது. அதில் ஆரம்பித்து இன்றளவும் ஜாண்டி கிராமத்தில் சற்றும் குறையாத நம்பிக்கையாய் வலம் வருகிறது எம்.எஸ்.சுவாமிநாதனின் விவசாயக் குறிகள்.

இன்னும் ஒருபடி மேலாக, சுவாமிநாதன் வருகை எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது என்கின்றனர் அக்கிராம மக்கள். விவசாயத்தில் புரட்சி மேற்கொண்டு பசுமை புரட்சியை மலரச் செய்த எம்.எஸ்.சுவாமிநாதன் கடந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி தனது 98வது வயதில் உயிர் நீத்தார். என்ன தான் உயிர் பிரிந்தாலும் இந்தியாவின் பசுமையை மீட்டெடுத்த வள்ளல் என்ற அவரது புகழ் என்றும் உயர்ந்து கொண்டு தான் இருக்கும்.

இதையும் படிங்க: மக்களவையில் அயோத்தி ராமர் கோயில் மீதான விவாதம்; திமுக எம்பிக்கள் அமளி!

Last Updated : Feb 11, 2024, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.