பதிண்டா (பஞ்சாப்): உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் நாளை (ஜன. 22) கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் மக்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா மாவட்டத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராம மக்கள் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தீபம் ஏற்றி கொண்டாட காத்திருக்கின்றனர்.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கும் அதற்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராம் தீர்த் ஜகா (Ram Tirath Jaga) கிராம மக்கள் உற்சாகம் அடைவதற்குமான காரணம், ராமருக்கும் இந்த ஊருக்கும் உள்ள தொடர்பு தான். இதுகுறித்து அந்த கிராமத்து வாசியான சனா ராம் (Chana Ram) பேசுகையில், "வனவாச காலத்தின் போது ராமர் இங்கு ஒரு ஆண்டு காலம் தங்கி இருந்தார்.
அதனால் தான் இந்த கிராமத்தின் பெயரும் ராமரின் பெயருடன் தொடர்பு கொண்டுள்ளது. வனவாச காலத்தில் ராமர் இங்கு தங்கி இருந்த போது இங்கு சரஸ்வதி நதி ஓடிக் கொண்டிருந்தது. அது தான் தற்போது இந்த இத்தலத்தில் குளமாக உள்ளது. இந்த கிராமத்தில் ராமர் கோயில் தவிர்த்து அனுமார் கோயிலும் உள்ளது.
ராமர் இங்கு இருந்ததை அறிந்த பக்தர்கள் இந்த ஊருக்கும் பயணம் வருவார்கள். வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் இங்கு வந்துள்ளனர். ஜனவரி 22 அன்று தீபம் ஏற்றி திருவிழாவாகக் கொண்டாடுவோம்” எனத் தெரிவித்தார். மேலும், இந்த கிராமத்தில் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் ராமர் கோயிலை, ராம பக்தர்கள் கட்டி முடிக்க வேண்டும் எனவும் சனா ராம் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: கோதண்டராமர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!