ETV Bharat / bharat

வயநாடு தொகுதியில் களமிறங்கும் பிரியங்கா காந்தி.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு - PRIYANKA GANDHI IN WAYANAD

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நவ.13 தேதி நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி(கோப்புப்படம்)
பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி(கோப்புப்படம்) (Credit - Congress X Account)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2024, 10:45 PM IST

டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அந்தத் தொகுதிக்கு அடுத்த மாதம் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வயநாடு(Wayanad) மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறும், இந்தத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 18 ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 25 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் வரும் 28 ஆம் தேதி பரிசீலிக்கப்படும். நவம்பர் 13 ஆம் தேதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். இதன் மூலம் முதன்முறையாக வாக்கு அரசியலுக்குள் நுழைகிறார் பிரியங்கா காந்தி. இதேபோல், கேரளாவில் காலியாக உள்ள பாலக்காடு சட்டப் பேரவை தொகுதியில் ராகுல் மம்கூடத்தில் மற்றும் தனித் தொகுதியான செலக்கரா தொகுதியில் ரம்யா ஹரிதாஸூம் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: "ஹரியானா போல கோட்டை விட்டு விடாதீர்கள்"-மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.