ETV Bharat / bharat

ஹாஸ்டலில் இருந்த +2 மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை.. வார்டன் சஸ்பெண்ட்.. நடந்தது என்ன? - chhattisgarh porta cabin hostel

school Girl Pregnant in Hostel:சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பெண்களுக்கான அரசு விடுதி ஒன்றில் 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு திடீரென குழந்தை பிறந்த சம்பவத்தில் விடுதி கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

chhattisgarh
chhattisgarh
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 9:44 AM IST

பிஜப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்களூர் பகுதியில் உள்ள பெண்களுக்காக மாநில அரசால் நடத்தப்படும் போர்டா கேபின் விடுதியில், 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி ( வயது 20) ஒருவர் தங்கிப் பயின்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவிக்குத் தலைவலி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குக் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து மாணவர்களின் உடல்நிலை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய விடுதி கண்காணிப்பாளர் அலட்சியமாகச் செயல்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போர்டா கேபின் விடுதி கண்காணிப்பாளர் அன்ஷு மின்ஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து போர்டா கேபின் விடுதியின் தலைவர் கூறுகையில்,"தற்போது குழந்தை பெற்றெடுத்த மாணவியும் குழந்தையும் நலமாக உள்ளனர். போர்டா கேபினுக்கு ஆண்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. குழந்தை பெற்றெடுத்த அந்த பெண் 3 வருடமாக ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

விடுமுறை தினங்களில் வீட்டிற்குச் செல்லும் இருவரும் பல முறை சந்தித்ததாக கூறப்படுகிறது. இருவரும் காதலித்து வந்தது அவர்களது பெற்றோர்களுக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் மாணவி கர்ப்பமானது குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று பெண்ணின் பெற்றோர்கள் கூறுகின்றன. தற்போது இரு குடும்பத்தினரின் உறவினர்களும் மருத்துவமனையில் இருக்கின்றனர்.

இது காதல் விவகாரம், பெண்ணும் மேஜர் என்பதால் அவர் முடிவு எடுப்பதை பொறுத்தே நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மட்டத்தில் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா போதையில் ஃபிரைட் ரைஸ் கடையில் கொள்ளையடித்த இளைஞர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.