ETV Bharat / bharat

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை.. யார் இவர்..?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் ஒய்வு பெறும் நிலையில் அடுத்த புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுடன்  தலைமை நீதிபதி சந்திரசூட்
உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுடன் தலைமை நீதிபதி சந்திரசூட் (credit -ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2024, 11:56 AM IST

Updated : Oct 17, 2024, 12:04 PM IST

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவிக்காலம் வரும் நவம்பர் 10 ஆம் தேதியோடு முடிகிறது. இதனால் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு மூத்த நீதிபதியான சஞ்சீவ் கண்ணாவை சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார்.

சந்திரசூட் நவம்பரில் ஒய்வு பெறுவதை முன்னிட்டு, புதிய தலைமை நீதிபதியை பரிந்துரைக்குமாறு மத்திய அரசு அவருக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கண்ணாவை, சந்திரசூட் பரிந்துரைத்துள்ளார். மத்திய அரசு இதனை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சஞ்சீவ் கண்ணா 2025 ஆம் ஆண்டு மே 13 வரை தலைமை நீதிபதியாக பணியாற்றுவார். அதன்படி, ஆறு மாத காலம் அவரது பதவி காலம் இருக்கும்.

சஞ்சீவ் கண்ணா: நீதிபதி சஞ்சீவ் கண்ணா 1983 ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். தொடக்கத்தில் இவர் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தில், வரிவிதிப்பு, நடுவர் மன்றம், வணிகச் சட்டம், நிறுவனச் சட்டம், நிலச் சட்டம், சுற்றுச்சூழல் மற்றும் மருத்துவம் தொடர்பான பல்வேறு வழக்குகளில் வாதாடியுள்ளார். வருமான வரித்துறையின் மூத்த வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

இதையும் படிங்க: ஹரியானா முதல்வராக பதவியேற்கும் நயாப் சிங் சைனி.. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்பு..!

கடந்த 2004 ஆம் ஆண்டு டெல்லியின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2005 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டு 2006 இல் நிரந்தர நீதிபதியானார். டெல்லி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா, டெல்லி சர்வதேச நடுவர் மையம் மற்றும் மாவட்ட நீதிமன்ற மையங்களின் தலைவர் பதவியிலும் இருந்தார். 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பதவி உயர்வு கிடைத்தது. தொடர்ந்து உச்ச நீதிமன்ற சட்ட சேவைக் குழுவின் தலைவராக ஜூன் 2023 முதல் டிசம்பர் 2023 வரை பதவி வகித்தார்.

நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது. டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்த வழக்கில், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இவர் தலைமையிலான அமர்வு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை உறுதி செய்த அரசியலமைப்பு அமர்வில் நீதிபதி சஞ்சீவ் கண்ணாவும் இடம்பெற்றிருந்தார். 2018 தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த அமர்விலும் சஞ்சீவ் கண்ணா இருந்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 17, 2024, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.