விஜயவாடா: ஆந்திராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்றக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருமலை திருப்பதி கோயில் லட்டுகள் தரமற்ற பொருட்களால் செய்யப்பட்டவை. குறிப்பாக, நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது லட்டு செய்வதற்கு சுத்தமான நெய் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் கோயில் வளாகம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) கீழ் செயல்பட்டு வரும் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டில் நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கேட்டபோது அதிர்ச்சியுற்றதாக ஆந்திராவின் ஐடி அமைச்சர் நாரா லோகேஷ் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு மதிப்பு அளிக்கவில்லை எனவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆதார் இருந்தா தான் லட்டு! திருப்பதி தேவஸ்தானம் கறார் முடிவு
దివ్య క్షేత్రం తిరుమల పవిత్రతను, వందలకోట్లమంది హిందువుల విశ్వాసాలను చంద్రబాబునాయుడు దారుణంగా దెబ్బతీసి పెద్ద పాపమే చేశాడు. తిరుమల ప్రసాదంపై చంద్రబాబు చేసిన వ్యాఖ్యలు అత్యంత దుర్మార్గం. మనిషి పుట్టుక పుట్టినవారెవ్వరూ కూడా ఇలాంటి మాటలు మాట్లాడరు, ఇలాంటి ఆరోపణలు చేయరు.1/2
— Y V Subba Reddy (@yvsubbareddymp) September 18, 2024
இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்வி சுப்பா ரெட்டி, “சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு என்பது தீங்கானது மற்றும் அவர் அரசியல் ஆதாயத்திற்காக எந்த நிலைக்கும் செல்வார் என்பதை காட்டுகிறது. புனிதமான திருப்பதி கோயிலின் சிறப்புத் தன்மையையும், கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையையும் அவரின் வார்த்தைகள் முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளது” என தனது எக்ஸ் தளத்தில் காட்டமாக விமர்சித்துள்ளார்.