ETV Bharat / bharat

அந்தமான்நிக்கோபர் தலைநகர் இனி 'ஸ்ரீ விஜயபுரம்' - அமித் ஷா அறிவிப்பு - Port Blair renamed Sri Vijaya Puram - PORT BLAIR RENAMED SRI VIJAYA PURAM

அந்தமான் நிக்கோபர் தீவின் தலைநகரான போர்ட் பிளேரின் பெயரை 'ஸ்ரீ விஜயபுரம்' என்று மாற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா (Credits - amit shah X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 8:56 PM IST

Updated : Sep 14, 2024, 6:30 AM IST

டெல்லி: அந்தமான் நிக்கோபர் தீவின் தலைநகரான போர்ட் பிளேரின் பெயரை 'ஸ்ரீ விஜயபுரம்' என மாற்றப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டை காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காக இன்று அந்தமான் நிக்கோபர் தீவின் தலைநகரான போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என மாற்ற முடிவு செய்துள்ளோம்.

இதற்கு முன்னதாக இருந்த பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், தற்போதைய பெயர் நமது சுதந்திர போராட்டத்தின் வெற்றியையும், அந்தமான் நிக்கோபர் தீவின் தனித்துவ பங்கையும் குறிக்கும். சுதந்திர போராட்டத்தில் அந்தமான் நிக்கோபர் தீவுக்கென தனி வரலாறு உள்ளது.

இதையும் படிங்க : 'அடுத்த 3 ஆண்டுகளில் செயற்கை கார்னியா?'..AI கொண்டு வரப்போகும் மாற்றம் என்ன?- விளக்குகிறார் டாக்டர் ஜி.என்.ராவ்,எல்வி பிரசாத் கண் நிறுவனம்!

முன்னதாக, சோழ மன்னர்களின் கடற்படை தளமாக அந்தமான் நிக்கோபர் தீவு விளங்கியது. அதுமட்டுமின்றி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் நமது தேசியக்கொடி முதன்முதலாக இங்கு தான் ஏற்றப்பட்டது. மேலும், சாவர்க்கர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடைத்த செல்லுலார் ஜெயிலும் இங்கு தான் உள்ளது" என எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Sep 14, 2024, 6:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.