ETV Bharat / bharat

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்; இரண்டு முக்கியப் புள்ளிகளை நள்ளிரவில் தூக்கிய சிபிஐ! - kolkata trainee doctor murder case - KOLKATA TRAINEE DOCTOR MURDER CASE

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பமாக, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் மற்றும் தாலா காவல் நிலைய கண்காணிப்பாளரை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது.

ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி  முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் - கோப்புப் படம்
ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் - கோப்புப் படம் (Credits -ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2024, 11:21 AM IST

கொல்கத்தா: மேற்கு வங் மாநிலத் தலைநகர், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இக்கொலை சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.. இவ்வழக்கின் நிலை அறிக்கையை சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் கடந்த 9 ஆம் தேதி தாக்கல் செய்தது.

இந்த நிலையில், இவ்வழக்கில் முக்கிய திருப்பமாக, ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய கண்காணிப்பாளர் அபிஜித் மோன்டல் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர். பயிற்சி பெண் மருத்துவர் கொலையின் தடயங்களை அழிக்க முயற்சித்தது, இச்சம்பவம் குறித்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேபோன்று, இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிய தாமதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அபிஜித் மோன்டல் கைதாகி உள்ளார் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, பயிற்சி பெண் மருத்துவருக்கு நேர்ந்த அநீதிக்கு நீதி கேட்டு போராடிவரும் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இளநிலை மருத்துவர்கள் சந்தீப் கோஷ், அபிஜித் மோன்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: என்ன கொடுமை சார் இது!.."ஒரு டீயின் விலை 340 ரூபாயா?" - ப.சிதம்பரம் ட்வீட்!

இக்கொலையின் ஆதாரங்களை அழித்ததில் தொடர்புடைய சந்தீப் கோஷ், அபிஜித் மோன்டல் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். அதன்படி, சிபிஐ தற்போது இருவரையும் கைது செய்துள்ள தகவலை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

'டீ குடிச்சிட்டு போகலாம்': முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக போராட்டக் குழுவின் பிரதிநிதிகள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசும் முயற்சி நேற்று இரண்டாவது முறையாக தோல்வியடைந்தது.

முக்கியமான இந்தச் சந்திப்பின்போது நடைபெறும் பேச்சுவார்த்தை நேரலையில் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று போராட்டக் குழு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இக்கொலை சம்பவம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், இதுதொடர்பான பேச்சுவார்த்தையை நேரலை செய்ய முடியாது.

வேண்டுமானால், தன்னுடனான மருத்துவக் குழுவினரின் சந்திப்பு குறித்த வீடியோ பதிவுகளை வேண்டுமானால் அவர்களுக்கு அளிக்கலாம். இந்த யோசனையை ஏற்று விரும்பினால் அவர்கள் என்னை சந்தித்து தாராளமாக பேசலாம். இல்லையென்றால், என் இல்லத்துக்கு வரும் அவர்கள் டீ குடித்துவிட்டு செல்லலாம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.