ETV Bharat / bharat

நாய் குட்டிகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற பெண்கள்.. உ.பி.யில் பதற வைக்கும் சம்பவம்..! - UTTAR PRADESH DOG MURDER

உத்தரப் பிரதேசத்தில் குரைக்கும் சத்தம் தூக்கத்தை கெடுப்பதாக கூறி பிறந்த மூன்று நாட்களே ஆன நாய் குட்டிகளை உயிரோடு எரித்து கொன்ற பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாய் குட்டிகள் கோப்புப்படம்
நாய் குட்டிகள் கோப்புப்படம் (credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 10:05 AM IST

மீரட்: உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த இரு பெண்கள் சேர்ந்து புதிதாக பிறந்த நாய் குட்டிகளை பெட்ரோல் ஊற்றி கொன்றுள்ளனர். விலங்கு நல ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மீரட் பகுதியைச் சேர்ந்தவர்கள் சோபா மற்றும் ஆர்த்தி. இவர்கள் இருவருமே ராணுவ வீரர்களின் மனைவிகள் ஆவர். இவர்கள் வீட்டருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நாய் ஒன்று 5 குட்டிகளை ஈன்றுள்ளது. பிறந்த அந்த குட்டிகளின் முணுமுணுப்பு சத்தத்தால் சோபாவும், ஆர்த்தியும் கடுப்பு ஆகியுள்ளனர்.

இதனால், கடந்த வியாழக்கிழமை அன்று காலை சோபாவும், ஆர்த்தியும் சேர்ந்து குட்டிகளை கொல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி, படுத்துறங்கிக்கொண்டிருந்த 5 நாய் குட்டிகளின் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொன்றுள்ளனர். பின்னர் மறுநாள் இந்த விவகாரம் அருகிலிருந்த விலங்குகள் பராமரிப்பு சங்கத்தினருக்கு தெரிய வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து இரு பெண்களிடம் விசாரித்தனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு பயிற்சி: 12ஆம் வகுப்பு மாணவி விடுதி அறையில் உயிரை மாய்த்துக்கொண்ட சோகம்..!

பின்னர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கர்கெடா காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு நாய் குட்டிகளை இரக்கமின்றி கொன்ற சோபா மற்றும் ஆர்த்தி மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் 325வது பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், இருவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த துயரமான சம்பவம் குறித்து அனிமல் கேர் சொசைட்டியின் செயலாளர் அன்சுமாலி வசிஸ்தா கூறுகையில், '' பிறந்து மூன்றே நாட்களே ஆன இந்த நாய்க்குட்டிகள் இரவில் குரைப்பதையும், முணுமுணுப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த பெண்கள் பெட்ரோல் ஊற்றி கொன்றுள்ளனர். வாயில்லா ஐந்து ஜீவன்கள் அந்த பெண்களுக்கு என்ன தீங்கு செய்தது? என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

காங்கர்கெடா காவல்நிலைய அதிகாரி ஜிதேந்திர குமார், '' குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு பெண்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

இதேபோல இந்தாண்டு தொடக்கத்தில் நொய்டாவில் ஒரு சிறுவன் உயரமான கட்டடத்தில் இருந்து ஒரு மாத நாய் குட்டியை கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து ஜனவரியில், டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் 6 நாய் குட்டிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டன.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960

விலங்குகளுக்கு தேவையில்லாத வலி அல்லது துன்பத்தை கொடுக்கும் நோக்கில் கொடுமைப்படுத்தினால், இந்த சட்டத்தின் கீ்ழ் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்படும். குற்றவாளிகளுக்கு அபராதமும், 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.