ETV Bharat / bharat

கோவையில் விதியை மீறிய தேர்தல் பிரச்சாரம்.. பாஜக அண்ணாமலை மீது வழக்குப் பதிவு - முழு பின்னணி என்ன? - Annamalai - ANNAMALAI

Case against BJP Annamalai: கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவை சிங்காநல்லூர் பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரவு 10.00 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

case-filed-against-bjp-candidate-annamalai-for-violation-of-lok-sabha-election-rules-in-coimbatore
கோவையில் விதியை மீறிய தேர்தல் பிரச்சாரம்.. பாஜக அண்ணாமலை மீது வழக்குப் பதிவு - முழு பின்னணி என்ன?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 3:10 PM IST

கோயம்புத்தூர்: பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை கோவை சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவருடன் இருந்த பாஜக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக, ஆவாரம்பாளையம் பகுதியில் மதியம் பிரச்சாரத்திற்கு அனுமதி வாங்கி இருந்தனர். ஆனால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கால தாமதமாக இரவு 10.30 மணிக்குப் பின்னர் வந்தார். வாகனத்தில் வந்த அவருக்கு, அப்பகுதியில் திரண்டிருந்த பாஜகவினர் மலர் தூவியும், பாரத் மாதாகி ஜெ எனக் கூறியும் வரவேற்பு அளித்தனர்.

இரவு 10 மணிக்கு மேலாக வாக்கு சேகரிக்க அனுமதி இல்லாத நிலையில், 10.30க்கு பின்னரும் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதை அனுமதிக்கக் கூடாது அப்பகுதியிலிருந்த திமுக, மற்றும் கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சியைச் சேர்ந்தவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

இதனால், அங்கிருந்த பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது. அப்போது திமுகவைச் சேர்ந்த மோகன்ராஜ், செல்லப்பா, ரங்கநாதன், சேகர், சதீஷ், சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசு மற்றும் மதிமுகவைச் சேர்ந்த குணசேகரன் ஆகியோர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனிடையே, அண்ணாமலையின் பிரச்சார வாகனம் அப்பகுதியில் இருந்து கிளம்பிச் சென்றது.

பாஜகவினர் தாக்கியதில் மார்பு பகுதியில் அடிபட்ட மதிமுகவைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து வந்த காவல் துறையினர் அப்பகுதியில் திரண்டு இருந்த பாஜகவினரை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் கலைய மறுத்து 'பாரத் மாதா கீ ஜெ' என முழக்கமிட்டனர். பின்னர் அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் கலைந்தனர்.

இதனிடையே, தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைந்து செல்லச் செய்தார்.

இது தொடர்பாக குணசேகரன் என்பவர் அளித்த புகார் அடிப்படையில் பாஜகவைச் சார்ந்த ஆனந்தன், மாசாணி, லட்சுமி செந்தில், ரங்கநாதன் ஆகிய நான்கு பேர் மீது மூன்று பிரிவின் கீழ் பீளமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் பிரச்சாரம் செய்ததாக பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை மீது தேர்தல் அலுவலர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை பிரச்சாரம்? திமுக - பாஜகவினர் மோதல்.. கோவையில் களேபரம் - நடந்தது என்ன? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.