ETV Bharat / bharat

2024 பட்ஜெட்: அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆலோசனை - Nirmala Sitharaman

Budget 2024: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜன.31) தொடங்க இருக்கும் நிலையில் இன்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Budget 2024
பட்ஜெட் கூட்டத்தொடர் 2024
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 10:47 AM IST

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அனைத்து கட்சித் தலைவர்களுடன் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆலோசனை நடத்த உள்ளார். அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று(ஜன.30) பிற்பகல் நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் நடைபெற உள்ளது.

இதனைத்தொடர்ந்து நாளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் தொடங்கும் அமர்வு பிப்.9 ஆம் தேதி நிறைவடைகிறது. இதனிடையே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட் ஆனது மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைக்கும் அரசாங்கம் வரை உள்ள இடைப்பட்ட காலத்தின் தேவைகளை தற்போது தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட் பூர்த்தி செய்கிறது.

முன்னதாக, ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடரானது குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது.

இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் இன்று அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முறைப்படியான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்திய தொழில் கூட்டமைப்புக்கான (சிஐஐ) பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக முன்னதாகவே பல பரிந்துரைகளும், பதவி விலகல் இலக்குகளை அடைவது மற்றும் அவற்றிற்கான மூன்றாண்டு கால அட்டவணையை அமைப்பது உள்ளிட்டவை குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "வணக்கம் வணக்கம்" - பரிட்சைக்கு பயமேன் நிகழ்ச்சியில் புதுச்சேரி மாணவிக்கு பிரதமர் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.