ETV Bharat / bharat

தெலங்கானாவின் ரியல் ஹீரோ.. தீ விபத்திலிருந்து பலரின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன் - குவியும் பாராட்டுகள்! - TELANGANA FIRE ACCIDENT - TELANGANA FIRE ACCIDENT

Telangana Fire Accident: தெலங்கானாவில், மூலிகை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Telangana Fire Accident
தெலங்கானா தீ விபத்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 3:07 PM IST

ரங்காரெட்டி (தெலங்கானா): தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள நந்திகம மண்டலத்தில், ஆலன் என்ற மூலிகை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தின் கட்டிடம் ஒன்றில், நேற்று (வெள்ளிகிழமை) மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்நேரம், அந்த கட்டிடத்திற்குள் 50 தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, நிறுவனத்தின் கட்டிடத்திற்குள் தீ வேகமாகப் பரவியதைக் கவனித்த நந்திகமவைச் சேர்ந்த சாய் சரண் என்ற சிறுவன், வேகமாக கட்டிடத்தின் மீது ஏறி, ஜன்னலில் தான் கொண்டு வந்த கயிற்றைக் கட்டியுள்ளார். பின்னர், கயிற்றின் உதவியுடன் சில தொழிலாளர்களைக் கீழே இறக்கி, அவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, கட்டிடத்தின் மேல் தளத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் அனைவரையும் ஏணி வழியாக பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே, மீட்புப் பணிக்கு முன்னதாக நெருப்பிற்கு பயந்து ஜன்னலில் இருந்து ஒரு தொழிலாளி கீழே குதித்ததில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் சிகிச்சைக்காக ஷாத்நகர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து உடனடியாக டி.ஆர்.டி.எல் என்ற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது, அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த ஷம்ஷாபாத் டிசிபி நாராயண ரெட்டி, விபத்து குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்த அவர், சொத்து சேதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்நிலையில், சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்ட சிறுவனின் துணிச்சலான செயலால், அனைத்து தொழிலாளர்களும் உயிருடன் காப்பாற்றப்பட்டதாக காவல் துறையினர் ஒருபுறம் வாழ்த்து தெரிவிக்க, மறுபுறம் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் சிறுவன் சாய் சரணை ரியல் ஹீரோ என பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக வீராங்கனை நேத்ரா குமணன்.. பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து! - Nethra Kumanan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.