ETV Bharat / bharat

ரத்தன் டாடாவின் காதல் கதைகள்.. பலரும் அறியாத டாடாவின் மறுபக்கம்! - RATAN TATA LOVE STORY

பிரபல தொழிலதிபராகவே அறியப்பட்ட ரத்தன் டாடாவின் வாழ்வு காதல் கதைகளும் நிறைந்தாகவே இருந்துள்ளது. அவரது நிஜ வாழ்வின் காதல் கதைகளில் முன்னாள் காதலியும், பிரபல பாலிவுட் நடிகையுமான சிமி கேரேவாலு முக்கியப் பாத்திரமாக திகழ்ந்தார்.

ரத்தன் டாடா(கோப்புப்படம்)
ரத்தன் டாடா(கோப்புப்படம்) (Credits - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 6:13 PM IST

ஹைதராபாத்: இந்திய பொருளாதாரத்தின் தூண்களின் ஒன்றாக அனைவராலும் போற்றப்படும் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா நேற்று (அக்.9) இரவு காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் ரத்தன் டாடாவின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 86.

இந்திய தொழில்துறையில் சிறந்து விளங்கிய ரத்தன் டாடாவின் இறப்பு, இந்திய மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் கனவாக மட்டுமே இருந்த விலையுயர்ந்த பல பெரிய பிராண்டுகளின் பொருட்களை, தனது நிறுவனங்களின் மூலம் அதே தரத்தில் மலிவு விலையில் விற்பனை செய்தார். தனது வருமானத்தின் பாதியை அறக்கட்டளைகளுக்கு வழங்கியுள்ளார்.

தொழில் நிறுவனங்களின் தலைவராக மட்டுமில்லாமல், மனித நேயமிகுந்த மனிதராகவும் அவர் வாழ்ந்ததால், அவரின் இழப்பு ஏழை, நடுத்தர மக்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒன்றாக இருக்கிறது. தொழில் துறையில் சிறந்து விளங்கிய ரத்தன் டாடாவின் தனிப்பட்ட வாழ்க்கை வித்தியாசமாகவே இருந்துள்ளது.

இதையும் படிங்க: ரத்தன் டாடா பற்றி சுவாரஸ்யமான 8 தகவல்கள்! மனிதர்களை நேசிக்கும் எளிய நபராக வாழ்ந்தவர்...

பல காதல்கள்: ரத்தன் டாடா இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் அவருக்கு பல காதல் உறவுகள் இருந்துள்ளன. அவரது வாழ்க்கையில் ஒரு சில காதலிகள் வந்து போயிருக்கிறார்கள். தனியார் இணையதள செய்தி நிறுவனத்திற்கு ரத்தன் டாடா அளித்த பேட்டியில், தான் லாஸ் ஏஞ்சல்ஸில் பணிபுரியும் போது ஒரு பெண்ணை காதலித்ததாகவும், காதல் உறவு வலுவாகவும் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1962இல் இந்தியா - சீனா இடையிலான போர் தங்களது காதல் கனவுகளை குலைத்தாகவும், அந்த பெண் இந்தியா வருவதற்கு பெண்ணின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இதனால் எங்களது காதல் முடிவுக்கு வந்ததாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தான் 4 முறை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு, 4 முறையும் தோல்வியில் முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஒன்று தான் பாலிவுட் நடிகையும், தொலைகாட்சி பிரபலமுமான சிமி கேரேவாலுடனான காதல். தோ படன், மேரா நாம் ஜோக்கர் மற்றும் கார்ஸ் போன்ற பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான நடிகை சிமி கேரேவாலும் ரத்தன் டாடாவும் காதலித்துள்ளனர். முன்பு ஒரு பேட்டியின் போது, ரத்தன் டாடா சிறந்த நகைச்சுவை உணர்வு, அடக்கம் நிறைந்த மனிதர்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது எப்போதும் அவருக்கு உந்து சக்தியாக இருந்ததே கிடையாது என்று சிமி கேரேவால் ரத்தன் டாடா பற்றி கூறியுள்ளார். அவர்களின் காதல் முறிந்தாலும், அவர்கள் பல ஆண்டுகள் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இந்த நிலையில் ரத்தன் டாடா மரணமடைந்ததைத் தொடர்ந்து, நடிகை சிமி கேரேவால் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் வலைதளத்தில் ரத்தன் டாடாவின் புகைப்படத்தை பகிர்ந்து, "நீங்கள் சென்று விட்டீர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். உங்களின் இழப்பை தாங்குவது மிகவும் கடினம். விடைபெறுங்கள் நண்பரே" என்று குறிப்பிட்டுள்ளார். தொழிலில் பல முன்னேற்றங்களை கண்ட ரத்தன் டாடா, தனது வாழ்க்வை பெரிதும் தனிமையிலேயே கழித்துள்ளார் என்பதே உண்மை.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.